மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

தர வட்டம் (தரக்குழு)


இழப்பைச் சிதறடிக்கும் இணைதளம் காணுங்கள்
இணைத்துச் சிறகடிக்கும் இனிய தரம் பாருங்கள்
இயல்பாய் சிறந்திருக்க வழி என்ன கேளுங்கள்
இனிதாய் சிரித்திருக்க தரக்குழுவில் சேருங்கள்

உன்னை உயர்த்தி உலகைக் காட்டும் ஏணி
உயரச் சொல்லி ஊக்கப்படுத்தும் தேனீ
உன்னால் முடியும் உணர்வை ஊட்டும் பேணி
உன் வரவால் தடைகள் தலையைக் கவிழ்க்கும் நாணி

குறைகள் களையும் கலையை வளர்க்கும் வாணி
குழுவாய் இணைந்து சாதனை படைக்கும் ஞானி
குன்றா இளமை தேகம் காட்டும் மேனி
குவியும் வெற்றி உலகம் போற்றும் பாணி

அக்கறை கொண்டு அக்கரை சேர்க்கும் தோணி
அழிவைத் தீண்ட ஆற்றல் கொடுக்கும் தீனி
அடையும் வெற்றி கண்டு போற்றும் தரணி
அகிலம் விரும்பும் தரம் விலை விநியோகம் கவனி




No comments:

Post a Comment