மனதின் வெளிப்பாடு


Sunday 16 September 2012

அச்சம் என்பது தேவைங்க



அச்சம் என்பது தேவைங்க
அஞ்சாமை உயிரைப் போக்குமுங்க
அச்சம் என்பது தேவைங்க
எய்ட்ஸ் அச்சம் என்பது தேவைங்க
அஞ்சாமை உயிரைப் போக்குமுங்க

பாரத நாடு பழம்பெரும் நாடு
உயருது அனைத்திலும் சிறப்போடு
இளைஞர்கள் கையில் எதிர்காலம் என
இருக்குது நம்பிக்கை கனவோடு

மேலைக் கல்வியில் முன்னிலை அடைந்தால்
நாட்டிற்கதுவே  சிறப்பாகும்
 மோகக் கலவியில் எய்ட்சை அடைந்தால்
குடும்பமும் நாடும் அழிவாகும்

மனைவி இருக்கையில் மற்றவள் எதற்கு ?
 என்றிருந்தாலோ துன்பமில்லை
இயன்றவரைக்கும் அனுபவிப்போம் என
நினைத்தால் வரும்துயர் கொஞ்சமில்லை

நோயை எதிர்க்கும் ஆற்றலைக் கொடுப்பது
அவரவர் ரத்தத்தின் வெள்ளை அணு
வெள்ளை அணுக்களை அழித்தே நோயை
சிறப்பாய் வளர்க்குது எய்ட்சின்  அணு

ஆசையின் தவறால் அடைந்திடும் சுகமோ
அனுபவிப்பவர்க்கோ  சில நிமிடம்
அதனால் அவரும் இழந்து தவிப்பது
அவரவர் வாழ்வின் பல வருடம்


ஆணுறை பெண்ணுறை இரண்டும் இருக்கு
அவசியம் நேர்ந்தால் அணிவதற்கு
அவசியம் தவிர்த்து ஒழுக்கம் காத்து
ஒழிப்போம் எய்ட்சை அடியோடு




  

Tuesday 4 September 2012

வளர்ச்சிக்கு வழிகாட்டும் தரம்


  

தமிழ்த்தாய் தரத்தை வாழ்த்தும்  கவிதை

  

நிறைவான தரமிருக்க

நிலைபெற்று தொழில் சிறக்கும்
சிறப்பான  தொழிலாலே
புகழ் பரவும் உலகமதில்
 

எக்கணமும் தரம் சிறக்க
உதவும் நல உத்திகளும்
தக்கவழி கண்டுணர்ந்தால்
தெறித்தோடும் இழப்புகளே
 

அகிலத்தின் தேவைபோல்
பொருள் படைத்து வெற்றிபெற
எத்திசையும் புகழ்மணக்க
போற்றுகின்ற தரம் படைக்க -தரம் படைக்க
 

நம்  தரக்குழுவின் திறம்வியந்து செயல்படைக்க
வாழ்த்துவமே .. வாழ்த்துவமே .. வாழ்த்துவமே



அழியாத புகழோடு வாழலாம்
அறிவார்ந்த தரத்தோடு உயரலாம்
அகிலத்தின் கவனத்தை ஈர்க்கலாம்
அனைவருமே  சிகரத்தை எட்டலாம்

வெற்றி என்ற சிகரம் உச்சிங்க
தொட்டு விட நினைக்கும் மனசுங்க
தரக்குழுவாக இணைந்து கூடுங்க
தரணியில் தனித்துவத்தைக் காட்டுங்க

தடம் பதித்த பாதையை உணருங்க
தரம் சிறந்த முறைகளைக் கேளுங்க
புண்படும் நிலை இன்னும் எதுக்குங்க
பண்பட்ட கலை கற்றால் புகழுங்க

தரம் என்னும் ஆணி வேர் மூலங்க
சிதையாமல் காப்பது நம் கடமைங்க
வாடிக்கையாளர் தேவை என்ன உணருங்க
உணர்ந்து உருவாக்கி உயருங்க
      









 

தர உத்தி தருமே சக்தி (கவிதை )

வருது வருது, தடைகள் பல  தரத்தைக் கெடுக்கவே
எச்சரிக்கை  யாயிருக்கோம் அதனைத் தடுக்கவே
டெமிங் ஜுரான் சொன்னது என்ன ஜப்பானுக்கு மட்டுமா ?
நாம கடைபிடித்தால் தடைகள் நம்ம எதிரில் நிக்குமா ?

குழுவாய் கூடி நாளும் நாம உயர்வை  அடையணும்
குறைகள் போக்கும் வழிமுறையை நாம கத்துக்கணும்
எ பி சி   அனாலிசிஸ் என்றால் என்னங்க ?
பிரச்னையைத் தரம் பிரிக்கும் முறைகள் தானுங்க

பிரச்சனைக்கு எமனு நம்ம செவனு டூல்சுங்க
நாம கத்துக்கிட்டா  பிரச்சனைங்க பதறி ஓடுங்க
வித் அவுட் டிக்கட்டுல  வருது தடைகளே
பிளான், டூ, செக், ஆக்ட்ல  மாட்டித் தவிக்குதே

 பி, டி, சி, எ,   சைக்கிள்  என்ன சாதா சைக்கிளா
தடம் பட்டா தடைகள் எல்லாம் தானா மறையுதே
தலை சீவி கிராப்பு வச்சு பவுடர் போடுறோம்
டேட்டா  கலெக்ட் பண்ணி கிராப் போட்டு
                                                   டிபெக்டைப்  போக்குறோம்

பரோட்டா குருமா சாப்பிடத்தான் ரொம்ப இஷ்டமா
பெரட்டோ சார்ட்   போட என்ன நமக்கு கஷ்டமா
பிரேக் இல்லா வண்டியால உயிருக்காபத்து
கண்ட்ரோல் சார்ட்   போடாட்டா தரத்துக்காபத்து

மீனு முள்ளு வரைபடம் தான் காஸ் அண்டு எபக்டு
ரூட் காஸ் தெரிஞ்சா போயிடுமே நமது டிபெக்டு 
யோக்யமா இருக்குறவன் நல்லவன் தானே
போக யோகே  செய்யுறவன் வல்லவன் தானே         

மாற்றம்னா என்றுமது  நிரந்தரம்தானே
கெய்சன்னா  மாற்றத்துக்கு மந்திரம்தானே
லீனா இருக்க விரும்புறது நல்லதுதானே
லீன் கான்செப்ட்ஸ் கத்துக்கிட்டா வெற்றிதானே

வெற்றி கூட்டும் யுக்தி பல இருக்குதுதானே
மனம் விரும்பி செய்ய செய்ய மகிழ்ச்சிதானே
வெற்றிக்கு அடித்தளமே  QC    தானே
QCFI  யோடு சேர்ந்திருந்தா மகிழ்ச்சி தானே 



(QCFI கவிதைப் போட்டிக்காக எழுதியது )