மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

தரக்குறள்




 அகமும் புறமும் இணைத்து  பொருளை 
தரமாய் நாளும் உயர்த்து

ஆவது ஆகட்டும் என்று சும்மாயிருந்தால்
தன்னால் வருமோ  தரம்

இயல்பான சிந்தனை தரமானால்  ஈடில்லா
சிறப்பு கிட்டுமே தரத்துக்கு

ஈதல்   இசைபட   வாழ்தல்  சிறப்பு
தரத்தால் அடைவோம் செருக்கு

உயர்ந்த தரமென்று சும்மாயிராமல் இன்னும்
தரத்தை முயன்று முன்னேற்று

ஊரு நேராது உலகை வசப்படுத்தும்
மாற்றுக்  குறையாத்  தரம்

எண்ணுவது சிறப்பு சாதிப்பது உழைப்பு
தரமே பொருளின் சிறப்பு

ஏன்  எதற்காக   எப்படி  சிந்தனையில்
உதிக்குமே உயர்ந்த தரம்

ஐயப்பாடு  எதற்கு தரமிருக்கு நமக்கு
தாரளமயமாக்கல் தவிப்பு எதற்கு

ஒண்ணு ஒண்ணா  சிந்தித்து  நெறிப்படுத்தும்
உண்மை உணர்வே தரம்

ஓடம் ஓடுது தண்ணியிலே  தொழில்
நன்றாய்  சிறக்குது தரத்தினிலே

ஔவை  சொன்னது  அறம்  why
why  காட்டுவது தரம்




No comments:

Post a Comment