மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

நம் இந்தியா



கனல்விடும் இளைய நெஞ்சங்களின்
சுடர்விடும்  சக்தி பெற்ற இந்தியா
தொடர்ச்சியான முன்னேற்றத்தின் சுவடுகளை
தொடர்ந்து தரும் வளர்ச்சி பெற்ற இந்தியா

கடந்தகால  இடைவெளியை சிதறடிக்கும் இந்தியா
உள்வளத் திறமையால் சிறகடிக்கும்  இந்தியா
 உலகமயமாக்கலில் உயர்வு கொள்ளும் இந்தியா
வர்த்தகத்தில் வணிகத்தில் வலுவான இந்தியா

அறிவியல் தொழில்நுட்பத்தில் பலமிக்க இந்தியா
டைட்டானியம் தாது வளத்தால் தலை நிமிரும் இந்தியா
புதியன புனையும் தொழில்வள இந்தியா
தன்னிறைவில் மனநிறைவு காணும் மதிப்பு மிக்க இந்தியா

மனிதவளத்தின் ஆதாரத்தால் மதிப்பு கூட்டும் இந்தியா
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் இந்தியா
வன்முறையை வேரறுக்கும் துணிவு பெற்ற இந்தியா
பேரணி நாடுகளின் முக்கிய நாடாய் முதிர்ச்சி பெரும் இந்தியா

போர்  வியூக வலிமைகளில் வளம் கூட்டும் இந்தியா
தன்முனைப்பால் தகுதி சேர்த்து தகுதி கூட்டும்  இந்தியா
இயற்கை வளத்தை நிறைவாக்கும் தேர்ச்சி பெற்ற இந்தியா
நதிநீரை தேசியமயமாக்கி சாதனை படைக்கும் இந்தியா

உழுநிலம் யாவுமே விளைநிலமாக்கி  பசுமைபெரும் இந்தியா
வேளாண்மையிலும்  உணவு பதப் படுத்துதலிலும் உயர்ந்து நிற்கும் இந்தியா
அணுக்கருப் பொருளினில் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலை பெரும் இந்தியா
அனைவரின் விருப்பமாய் வல்லரசாகி உயரும் நம் இந்தியா




 

No comments:

Post a Comment