மனதின் வெளிப்பாடு


Tuesday 30 October 2012


    

இஸ்லாமிய  வருடப்பிறப்பு 

ஹிஜ்ரி 1434 (16.11.2012)


 

வாழ்த்துரை

      
நிறைவுடைய வாழ்வளித்து
நெடுநிலங்  காப்பதற்கு
மறையளித்த இறைவனுக்கே
மாபெரிய  புகழனைத்தும்
 
இறைவிரும்பும்  மறைவழியில்
இகத்தோரை அழைத்ததற்காய் 
குறைஷியர்கள் கொதித்தெழுந்து
கொன்றுவிட   எத்தனிக்க

நிறைமதியாம்  மாநபிதம்
நண்பர்அபூ  பக்கருடன்
மறைவாக மக்கா விட்டு
மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த

திரையகன்ற திருநாளே
தீனோர்க்குப்  புத்தாண்டாம்
இறைதூதர் முஹம்மது  (ஸல் )
இயம்பிட்ட ஹிஜ்ரி ஆண்டு

குறைபோக்கி  நலவளமும்
குன்றாது நமக்களிக்க
இறையோனை இறைஞ்சிஎன் 
இன்வாழ்த்தை  இயம்புகின்றேன்




முகவை. முகம்மது ஆதம்
பன்னூல் ஆசிரியர்  
செல் :   7708179412
தென் ரயில்வே  மதுரை கோட்ட  
 புகைவண்டி கட்டுப்பாட்டு அதிகாரி  (ஒய்வு)









Monday 22 October 2012

தியாகத் திருநாள் வாழ்த்து




இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான்.

இறைவனுடைய படைப்பிலேயே  சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால் படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.

நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.

நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை,  இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.

செல்வம், அகம்பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவக் கூடுகளை  சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்

.இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்

இவ்வு லகை படைத்து பரிபாலிப்பவனே
அளவற்ற அருள் பொழிபவனே
 நிகரற்ற அன்புடையோனே
தீர்ப்பு நாளின் அதிபதியே
உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக.

அன்பு, பாசம், பரிசு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்!

நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை, இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமன்றி இனிவரும் நாட்களிலும் எல்லாருக்கும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம்.
எல்லாம் வல்ல இறைவனே.. உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!
நன்றியும், கரு ணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக்கச் செய்வாயாக .

எம்.ஏ.ஆர்.அப்துல்லா  நிர்வாகி, பெரியமேடு பள்ளிவாசல்

Sunday 21 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து





தள்ளாத வயதினிலே 
தான் பெற்ற ஒரே மகனாம் 
இளைஞரான இஸ்மாயீலை
இறைவனுக்காய்  பலி கொடுக்க 
இம்மியேனும் மனம் கலங்கா 
துணிந்திட்ட இப்ராஹீமின் 
உள்ளத்தில் உறைந்திருந்த 
உன்னத உறுதியினை  
வல்ல நாயன் மனமுவந்து 
வானிருந்து ஆடு இறக்கி 
நல்லதல்லா நர பலியை 
நானிலத்தில் ஒழித்திட்ட 
நன்னாளாம் தியாகத்திருநாள் 
நயம் பயக்க அனைவருக்கும் 
வல்லோனை இறைஞ்சி என் 
வாழ்த்தினையும் கூறுகிறேன் 

 












குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37
 


எழுதியவர்  -    முகவை . முகமது  ஆதம் 

                                                   cell :   7708179412




 

Friday 19 October 2012

தொலைந்த கரண்டை மீட்டுத் தாருங்கள்




நிம்மதியான தூக்கம் போச்சு 
குறைந்த விநியோகத்துக்கு 
செலவும் கூடுதலாச்சு 
எப்போது வரும் போகுமென்று 
கணிக்க மிக கஷ்ட மாச்சு  
ஒத்துழைத்த இன்வேர்ட்டர் 
ஒதுங்கிக் கொண்டு நாளாச்சு 

கரண்ட் இல்லா சிக்னலாலே 
போக்குவரத்து நெரிசலாச்சு 
வாகனத்தில் பயணம் செய்ய 
மனசுக்குள்ள எரிச்சலாசசு 
சாலை மறியல் தினம் 
வாடிக்கையாய் மாறிருச்சு

சிறு தொழில் கூடங்கள்  மூடியாச்சு 
பணிபுரிந்தோர் இல்லங்கள் 
வறுமையின் பிடியில் சிக்கியாச்சு  
உழைத்துப் பிழைத்தவர்கள் 
திருடிப் பிழைக்க நேர்ந்திருச்சு 
மின் மிகை மாநிலமாய் 
உருமாறும் நாளுக்காய் 
தமிழனின் ஏக்கம் கூடிருச்சு 

இல்லாமையை  புரிஞ்சுக்க 
அறிவுறுத்துகின்றது  அரசு 
ஆறு மணி நேரத்தை 
பதினான்கு மணி நேரமாய் 
மாற்றுவதா  பெரிசு?

அந்நிய முதலீட்டுக்கு  மின்வெட்டில்லை 
அதனாலே மற்றவர்க்கு கூடுதல் தொல்லை 
ஒருதாயின் பிள்ளைக்குள்  பாகுபாடா ?
பகிர்ந்தளிப்பதில் வேறுபாடா ?

பசி வந்தால் அழுதிடும் குழந்தை 
தாயிடம் பாலில்லை 
சொன்னால் நின்றிடுமோ அழுகை ?
சேயின் பசி போக்குவது தாயின் கடமை 
அழாதே எனச் சொல்வது மடமை 

முடிவெடுக்கும் திறன் பெற்ற அன்னை 
முயன்று கவனித்தால் முடியும் 
மின் மிகை மாநிலமாய் தமிழகம் உருமாறும் .








Wednesday 3 October 2012

மத்திய தொழிலாளர் கல்வி வாரியம்



வளர்ச்சிக்கு வழிகாட்டும் வாரியங்கள்
வளமுடனே செழிக்கட்டும் அவனியிலே
பலனெல்லாம் பரவட்டும் விரைவினிலே
பாரெல்லாம்  போற்றட்டும் உயர்வினிலே

 உழைப்பவர் வாழ்வில் வளம் காண
உற்பத்தியில் அவரும் திறன் காண
கல்வியில் மேம்பாடு அவசியமே
அனைவரும்  பெற்றால் வரும் நலனே

கருத்தில் இனிதே இதைக்கொண்டு
மத்திய அரசின் துணை கொண்டு
மகிழ்வுடன் பணியாற்றும் வாரியம்
மத்திய தொழிலாளர் கல்வி வாரியம்

ஆண்டுகள் ஐம்பது இனிதாக
பொன்விழாக் காண்பது  நிஜமாக
வெற்றியுடன்  பூரிக்கின்றது வாரியம்
என்றென்றும் குறையாது அதன் வீரியம்

தொழிலாளர்களை மாணவர்களாக்கி
ஆசிரியர்களாய்  உருமாற்றி
அவரவர் ஆலையில் பணி  சிறக்க
 வழிகாட்டும்  உன்னதமிக்க வாரியம்

கட்டணம் ஏதுமின்றி கல்வியை கற்பிக்கும்
கண்ணியமிக்க வாரியம்
தன்னலம் கருதாப் பொதுத்தொண்டால்
பிறர்நலம் பேணுகின்ற பெருமை மிக்க வாரியம்

தொலை நோக்குப் பார்வையாலே
தொழிலாளர் தொல்லை நீக்கி
அக்கறையோடு அககரை சேர்க்கும்
அன்புள்ளம் கொண்ட வாரியம்

வாரியத்தின் பணிகள் சிறந்திடவே
குருவாயிருந்து கல்வி புகட்ட
ஐவர் குழுவுடனே அமைந்தது
மதுரை மண்டல வாரியம்

பயிலும் வாய்ப்பை பெற்றது
நாங்கள் பெற்ற பாக்கியம்
ஐந்தருவியில் குளித்தது போல் குளுமை
ஐந்து ஆசிரியர்களின் பணியும் அருமை

கற்றுத்தரும் முறையோ எளிமை
சொல்லி முடியுமோ இந்தப் பெருமை
தொடரட்டும் வாரியத்தின் பணி
நீங்கட்டும் கல்வியில்லாப் பிணி

ஓங்கட்டும் தொழில் உறவுகள் இனி
ஒலிக்கட்டும் புதுயுகத்தின் தொனி

(மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் ஐம்பது ஆண்டு நிறைவைப் பாராட்டி ,தொழிலாளர் கல்வி ஆசிரியர் பயிற்சியின் போது எழுதியது)