மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

ஷேர் ஆட்டோ


குழிஇல்லாமலே  குதித்தாடும்
மூன்று சக்கர தேர்

மஞ்சள் பூசி
மனிதர்களைத் தேடும்
சேவை வாகனம்

பாதையை விட
பாதசாரிகளையே
கண்காணிக்கும்
இதன் பார்வை

ஓட்டுனர் இருக்கையில்
ஒய்யார சவாரி
பல சந்தர்ப்பங்களில்

தனித்து செல்வதைவிட
திணுத்துச் சென்றாலும்
சிக்கனத்தை நேசிப்போரின்
சிறந்த நண்பன்

ஆண்  பெண்  சமத்துவத்தை
அனுதினமும் அரங்கேற்றும்
அவசரப் பயணம்

நினைத்த இடத்தில்
நின்று செல்லும்
இதன் சேவை
பின்வரும் வாகனத்துக்கு
தருகிறது சோர்வை
சிந்திப்போமா...





No comments:

Post a Comment