மனதின் வெளிப்பாடு


Saturday 4 September 2021

குழப்பம் வேண்டாம்

குழப்பங்கள் உருவாக்கும் காரணிகள்

  1. எதையும் அவசர அவசரமாக செய்ய முயல்வது
  2. எதை முதலில் செய்வது, எதை பின்னர் செய்வது என்று திட்டமிடாதது.
  3. எல்லாவற்றையும் இழுத்து போட்டுகொண்டு செய்ய முயல்வது.
  4. செய்ய வேண்டிய செயல்களை உரிய நேரத்தில் செய்யாமல் காலம் தாழ்த்துவது.
  5. பின்னர் பார்த்து கொள்ளலாம் என்ற அலட்சிய போக்கு.
  6. கடந்த காலத்தில் நடந்த செயலுக்காக வருந்துவது.
  7. எதிர்காலத்தில் அப்படி நடந்து விடுமோ என்று பயப்படுவது.
  8. எதெற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவது.

 

Friday 3 September 2021

ACMA - வாழ்த்து கவிதை

ACMA( Automotive Components Manufacturers Association)
6th QC Competition at Bangalore on 16/07/2011 - Hotel Atria)
 16/07/2011 அன்று எழுதியது

                வாழ்த்து கவிதை 

உயர்வைக் கூட்டும் அக்மா

எல்லையில்லா அன்புக்கு அம்மா 
தொல்லையில்லா தொழிலுக்கு அக்மா 
அஃ என்பது தமிழ் மொழியின் ஆயுத எழுத்து
அஃமா என்பது ஆட்டோமோட்டிவ் காம்போனென்ட்ஸ்
 உற்பத்தியாளர்களின் ஆனந்த  எழுத்து
பல நிறுவனங்களை தன்னகத்தே இணைத்துள்ள 
அக்மா ஒரு சிறந்த அமைப்பு
அக்மாவோடு இணைந்து செயல்படுவதால் 
தொழிலில் வளர்ச்சியின் பிரதிபலிப்பு.

600 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இணைப்பு அக்மா
வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் அக்மா
மேம்பட்ட தரத்தை ஊக்குவிக்கும் அக்மா
புதிய தொழில்நுட்பத்துக்கு மெருகூட்டும் அக்மா
உலகளாவிய வர்த்தகத்தின் உறுதுணைவன் அக்மா
சேகரிக்கும் செயல்திறனால் மணம்பரப்பும் அக்மா 
பல பூக்கள் இணைந்த பூமாலை போன்றது அக்மா
பாமாலை பலதொடுக்கும் கீர்த்தி பெற்றது அக்மா
இணைந்த நிறுவங்கள் பெற்றிருக்கும் சான்றுகளால் 
வளர்ந்த இந்தியா நமதென்று மார்தட்டும் அக்மா.

ISO 9001, ISO 14001,OHSAS, TPM, DEMING
இதுமட்டுமா ? 
Japan Quality medal,
Singo Silver Medalliyan,
Jipm Excellence Award
போன்ற பல விருதுகளை பெற்றிருக்கும் 
நிறுவனங்கள் இதனுள் இணைப்பு
அக்மாவின் சீரிய செயல்பாட்டால் 
நீங்கிடாது அதன் பிணைப்பு.

சிறந்த தலைமை வளர்ச்சியின் அங்கம் 
அஃமாவின் தலைமை தற்போது
ஐயா , ஸ்ரீ வத்ஸராமின் சொந்தம்
ஆட்டோமோட்டிவ் பொருட்களின் 
உற்பத்தியோ வசந்தம்.
தென் பிராந்தியத்தின் தலைவர் 
ஐயா,ஹரிஷ் லட்சுமணன் 
ராமும், லட்சுமணனும் இணைந்து செயல்பட்டது
இதிகாசத்தில் மட்டுமல்ல
இன்றும் நடக்கிறது அஃமாவில்
வளர்ச்சி சிறக்கிறது செயல்திறனில்.

 
தொடரட்டும் அஃமாவின் பணி
மலரட்டும் புதுயுகத்தின் பாணி
தடையில்லா வர்த்தகத்தில் போட்டியை தவிர்த்து
தலை நிமிர்ந்து நிற்கட்டும் நம் இந்தியா 
என்றென்றும் இனி. 

சிறந்த அரவணைப்பு
சீரிய உபசரிப்பு
அஃமாவின் தனிச்சிறப்பு.

Thursday 2 September 2021

தொழிலை சிறப்பிக்கும் TOC

தொழிலை சிறப்பிக்கும் TOC

இழப்பை சிதறடிக்கும் இணைய தளம் காணுங்கள் 

இணைத்துச் சிறகடிக்கும் இனியதரம் பாருங்கள் 

இயல்பாய் சிறந்திருக்க வழி என்ன கேளுங்கள் 

இனிதாய் சிரித்திருக்க TOC யை நாடுங்கள் 

TOC - THEORY OF CONSTRAINTS 

இழப்பை இனம் கண்டு அழிக்கின்ற வழி

இன்னும் தொழிலை சிறப்பிக்கும் வழி 

உழைப்பை முறைப்படுத்தி 

வாடிக்கையாளருடனான இணைப்பை 

பலப்படுத்தும் மிகச் சிறந்த வழி.


சந்தையின் வகை இரண்டு

விற்பவர் சந்தை,வாங்குபவர் சந்தை 

விற்பவர் ஆதிக்கம் அதிகமானால் 

அது விற்பவர் சந்தை.

பொருள் பெறுபவர்,ஆதிக்கம் அதிகமானால் 

அது வாங்குபவர் சந்தை.

உலகமயமாக்கலால்  

உருவான போட்டியால் 

வாடிக்கையாளர்கள் சந்தையே 

உலகில் வலம் வருகின்றது 

வாடிக்கையாளர் மனநிறைவையே

அது பெரிதும் எதிர்பார்க்கிறது.


தேவையான பொருள், தேவையான நேரத்தில்

முழுமையான தரத்தில்,

வாடிக்கையாளரை சென்றடைவது தரம்.

காலம் தாமதமானால் காலாவதியாகிவிடும் 

அந்த ஆர்டரின் நிரந்தரம் 


உரிய பொருளை உரிய நேரத்தில்

செய்யச் சொல்வது TOC

ஆர்டரை எதிர்பார்த்து 

பொருளை செய்து குவிப்பது இழப்பு.

அதனால் ஏற்படும் 

பணச்சுழற்சியில் தவிப்பு

சூழலை உணர்வது பொறுப்பு

உணர்ந்து செயல்படத்தூண்டுவதே 

TOC யின் பிரதிபலிப்பு.


நமது ஆர்டரின் அன்றாட தேவையை 

கலர் கலராய் தரம் பிரிக்கின்றது.

கருப்பு , சிகப்பு, மஞ்சள்

பச்சை, வெள்ளை என 

வரிசைப்படுத்தி, வண்ணம் தீட்டி

நம் எண்ணத்தில் பதிக்கிறது.

கருப்பை முன்னிலைப்படுத்தி

 மிக விரைவாய்

செயல்புரிய தூண்டுகிறது.

கருப்பு, சிகப்பு முதல்ல பார் 

பச்சையும், மஞ்சளும், பதறாம பார்

வாடிக்கையாளர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்

தொழில் இன்னும் சிறப்பதைப் பார்.


TOC வழக்கமான நடைமுறையிலிருந்து 

சிறிது மாறுபடும்

சற்று கசப்பான மருந்து.

அருந்தினால் புசிக்கலாம் அறுசுவை விருந்து

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட

மிகச்சரியான நடவடிக்கை TOC.


கிரிக்கட்டில் சரியக்கூடாது விக்கட்டு

தொழிலில் சரியக்கூடாது மார்கெட்டு

அதுக்காக உழைக்கணும் மெனக்கெட்டு

TOC அதுக்கான படிக்கட்டு.


வாடிக்கையாளரை வசமாக்குவோம்

வாழ்க்கையை வளமாக்குவோம்

TOC யை ஆயுதமாக்குவோம்

தொழிலை ஆனந்தமாக்குவோம்.

(நிறுவனத்தில் பணிபுரிந்த போது TOC செயல்பாட்டை 
ஆரம்பிக்கும் போது எழுதியது.)