டெமிங், ஜுரான், இஷிகாவா,
கற்றுத் தந்தது தரமாகும்
கற்றவர் பெற்றது வளமாகும்
அனைவரும் கற்றால் நலமாகும்
பிரச்சனை மூன்று வகையாகும்
அ , ஆ, இ என்பது பிரிவாகும்
நாமே தீர்ப்பது அ வாகும்
பிறரை இணைத்தால் ஆ வாகும்
நிறுவனம் சேர்ந்தால் இ யாகும்
தர மேதைகள் சொன்ன முறையாகும்
படிகள் இருக்கு பனிரெண்டு
அதனைத் தொடர்ந்தால் தரமுண்டு
அ ஆ இ என இனம் கண்டு
அ வை மட்டும் முதற்கண்டு
பரோட்டா வரைபடத் துணைகொண்டு
முக்கியப் பிரச்சனை தனைக்கண்டு
இயக்கப் பாதை விளக்கப்படம்
இன்னும் புள்ளிவிபரத் துணையுடனே
அலசி ஆராய்தல் செயல்திறனே
அனைவரும் முயன்றால் வரும் நலனே
கற்றுத் தந்தது தரமாகும்
கற்றவர் பெற்றது வளமாகும்
அனைவரும் கற்றால் நலமாகும்
பிரச்சனை மூன்று வகையாகும்
அ , ஆ, இ என்பது பிரிவாகும்
நாமே தீர்ப்பது அ வாகும்
பிறரை இணைத்தால் ஆ வாகும்
நிறுவனம் சேர்ந்தால் இ யாகும்
தர மேதைகள் சொன்ன முறையாகும்
படிகள் இருக்கு பனிரெண்டு
அதனைத் தொடர்ந்தால் தரமுண்டு
அ ஆ இ என இனம் கண்டு
அ வை மட்டும் முதற்கண்டு
பரோட்டா வரைபடத் துணைகொண்டு
முக்கியப் பிரச்சனை தனைக்கண்டு
இயக்கப் பாதை விளக்கப்படம்
இன்னும் புள்ளிவிபரத் துணையுடனே
அலசி ஆராய்தல் செயல்திறனே
அனைவரும் முயன்றால் வரும் நலனே
குழுவாய் இணைதல் இயல்பாக
சிந்தனைத் தூண்டுதல் வழியாக
ஏன்? எப்படி? எங்கென்று?
எவ்வாறு? எதனால்?யாரென்று?
கேள்வி மூலம் கண்டறிந்து
உண்மைக் காரணம் தெளிவாக்கும்
காரண விளைவு வரைபடமே
காட்டிடும் மூல காரணமே
பரவல் செவ்வக வரைபடங்கள்
சிதறல் விளக்க வரைபடங்கள்
விவாதம் செய்ய எளிதாகும்
தீர்வின் வழிகள் தனைக்கூறும்
புதிய முறையின் செயல்பாட்டால்
எதிர்ப்பு ஏதும் ஏற்பட்டால்
தவிர்ப்பது எப்படி தானென்ற
யோசனை தரத்தைச் சிறப்பாக்கும்
சோதனை முறையில் செயலாக்கம்
விளைவுகள் புள்ளி விபரங்கள்
தீர்வின் நிலைதனை எளிதாக்கும்
தீர்வு என்றால் அமலாக்கம்
இல்லை என்றால் மாற்று வழி
தருமே நமக்கு உரிய வழி
தீர்வை சிறப்பாய் கண்காணி
தரத்தின் படிகள் உணர்வாய் நீ
தவிர்ப்பது எப்படி தானென்ற
யோசனை தரத்தைச் சிறப்பாக்கும்
சோதனை முறையில் செயலாக்கம்
விளைவுகள் புள்ளி விபரங்கள்
தீர்வின் நிலைதனை எளிதாக்கும்
தீர்வு என்றால் அமலாக்கம்
இல்லை என்றால் மாற்று வழி
தருமே நமக்கு உரிய வழி
தீர்வை சிறப்பாய் கண்காணி
தரத்தின் படிகள் உணர்வாய் நீ
No comments:
Post a Comment