மனதின் வெளிப்பாடு


Friday 29 June 2012

ஜடமாக உருமாருங்கள்



பெற்றோர்களே , பெரியவர்களே
நீங்கள் பெற்றீர்கள்,வளர்த்தீர்கள்
உங்கள் கடமையை
உங்களால் முடிந்த வரை
எங்களுக்கு செய்தீர்கள்
அதற்காக எங்களின்  கடமையை
எங்களின் பிள்ளைகளுக்கு
செய்யும் உரிமையில் தலையிடாதீர்கள்..

உங்களின் காலத்துக்கும்
எங்களின்  காலத்துக்கும்
பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும்
நிறைய ..........   இடைவெளி .

இடைவெளியை காரணம் காட்டி
உங்களுடனான இடைவெளியை
அதிகரிக்காதீர்கள்

நிகழ் காலத்தோடு
ஒட்டி வாழப் பழகுங்கள்
உங்களுக்கு பிடிக்கா விட்ட்டலும் ....

நிம்மதியும் சந்தோசமும்
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் சேர்த்துதான்

மனைவியின் மந்திரம்
என்று பறைசாற்றுகின்றீர்கள் 
எந்திரமாய் எங்களை
ஏன் மாற்றுகின்றீர்கள் ?

மூன்று வேளை சோற்றுக்கா
இங்கு இருக்கிறோம் ?
முதிர்ந்த வயதில்
அன்பையும அரவணைப்பையும்
எதிர்பார்த்துதானே?
கேள்வி நியாயம் தான்
எங்கள்  வீட்டு விசயங்களில்
எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைக்கும்
பண்பால் அல்லவா அன்பு
அடைபட்டுபோகிறது..

நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கும் போது
உங்களின் ஆதிக்கம் - நீங்கள்
எங்களைச் சார்ந்திருக்கும் போது
எங்களின் ஆதிக்கம் 
ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகின்றீர்கள் ?
வாழ்க்கை ஒரு வட்டம்
ஒருகட்டத்தில் ஆட்டம் மாறும் போது
ஏன் வாட்டம்  அடைகிறீர்கள் ?

கடைசிவரை நான்தான் ...
நீங்கள் எண்ணினால்
உங்களின் எதிர்காலத்துக்கு
முன் கூட்டியே திட்டமிடுங்கள்
யாரையும் சாராதீர்கள்
தள்ளி நின்று பிள்ளைகளை ரசியுங்கள்

அதற்கு வழியில்லைஎன்றால்
ஜடமாக உருமாருங்கள்
உணர்வை புறம் தள்ளுங்கள்
ஏனென்றால்
கலாச்சாரச் சீரழிவால்
முந்தைய தலைமுறையை
அலட்சியப்படுத்தும்
நிறைய ஜடங்களே  உருவாகின்றன
எங்களையும் சேர்த்து .... 










Tuesday 26 June 2012

மந்திரி பதவி

அவருக்கு
மந்திரி பதவி
கொடுத்ததற்காக
வருத்தப்பட்டவர்கள்
சந்தோசப்பட்டார்கள்
அது மந்த த்ரீ பதவிதான் 
எனத் தெரிந்ததும் ....

பரட்டைத் தலைக்காரி





 ஹோட்டல் வாசலில்
பரட்டைத் தலைக்காரி
வேண்டுமென்று
கேட்டுக் கொண்டிருந்த
பிச்சைக்காரனை
நெருங்கிக் கேட்டபோதுதான்
தெரிந்தது
அவன் கேட்டது
பரோட்டா , தலைக்கறி  என்று....

அரசியலில் எல்லாம் சகஜம்'

குதி குதின்னு  குதிக்கிறார்கள்
தொகுதிப் பங்கீட்டில்
தகுதி பற்றி
தப்பாய் [பேசியவர்களை
தட்டிக் கேட்காத
தலைவரிடம் ....


பார்வதி

மூணு ரவுண்டு  முடிஞ்சாச்சு
இன்னும் ஏண்டா உள்ள போற ?
அண்ணே ஒரு நிமிஷம்
பார்வதியை பார்த்துட்டு  வந்திடறேன்
பார்வதி எங்கடா இங்க ?
பார்வதி உள்ளதுன்னு
இந்த போர்டுல எழுதிருக்கு ...
பார்வதி இல்லேடா
அது பார் வசதி .....
அண்ணே ஒத்துக்கிறேன்
எனக்கு போதை ஏறிடுச்சு
நீங்கள் உள்ள போங்க
இன்னொரு ரவுண்டு  ஏத்திக்கங்க ....
 ..
 குறிப்பு 
               குடி குடியை கெடுக்கும்
                உடல் நலத்தைக் கெடுக்கும்
                பிள்ளைகளின் மனநிலையை  பாதிக்கும்
                நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்
                தகாத செயலை செய்யத் தூண்டும்
                உழைக்கிற பணம் விரயமாகும்
                     "   ஒழியட்டும் குடிப்பழக்கம் 
                          தொலையட்டும் அதன் வருத்தம் "
   

ஊன்று கோல்


முதிர்ந்த வயதில்
முளைக்கிற
இன்னொரு கால்

தளர்ந்த தேகம்
தள்ளாடும் போது
தடுமாற்றம் களையும்
தடி  நிவாரணி

இதன் நட்பால்
நகர்கிறார்கள்
இடம் விட்டு இடம்
முதியவர்கள்

இதன் பிடியில்
நிமிர்ந்து நடந்த
உயர்ந்த மனிதர்களும்
பணிவு என்பதை
பறைசாற்றுகிறார்கள்



 கைவிட்ட கால்களை                             
 கரம் தொட்டு இயக்கும   
  இன்னொரு கால
   ஊன்று கோல்

Monday 25 June 2012

கையில் ஒரு கோடி


கனவு தேவதை கனவில் வந்தாள்
மெல்ல என்னை தட்டி எழுப்பினாள்
கையில் ஒரு கோடி
கிடைத்தால் என்ன செய்வாய்
எனக் கேட்டாள் ...

படபடக்கும் மனதை பக்குவப் படுத்தி
நான் சொன்னேன்
சின்னதாய் ஒரு வீடு கட்ட
எனக்குள்ளே ஆசை  இருந்தாலும்
அநாதை இல்லங்களுக்கும்
தொண்டு நிறுவனங்களுக்கும்
சமமாய் பிரித்தளிக்க
சம்மதம் தருவேன் ..

உற்சாகம் அடைவேன்
உறவினருக்கு தெரிவிப்பேன்
மறந்து போன நினைவுகளை
மனதில் பதிப்பேன்
பொது அறிவை வளர்ப்பேன்
பலரை உடன் அழைப்பேன்

அரங்கில் நுழைந்ததும்
பெருமிதம் அடைவேன்
சிரிக்கத் தெரியா விட்டாலும்
விழுந்து விழுந்து சிரிப்பேன்
சொல்வதைக் கேட்டு ரசிப்பேன்

விடை தெரியா விட்டாலும்
விடைகள் அனைத்திலும்
பணத்தைக் கட்டுவேன்
ஆர்வமாய் எதிர்பார்ப்பேன்
ஆனந்தமாய் கை தட்டுவேன்

கையில் ஒரு கோடி
என் நிகழ்ச்சி
சன்  டி வி யில்
எப்போது வருமென்று
எதிர் பார்த்து காத்திருப்பேன்

மெல்ல முகம் சுளித்தாள்
கனவு தேவதை
நிகழ்ச்சியை கேட்க வில்லை
நிஜத்தை கேட்டேன் என்றாள் ..
 
நிஜத்தை சொல்ல ஆரம்பித்தேன்
அநாதை இல்லங்களுக்கும்
தொண்டு நிறுவனங்களுக்கும்
அல்வா கொடுப்பேன் ...
போதும் நிறுத்து என்று 
 போய் விட்டது கனவு தேவதை ...


 (   இல்லாததைக் கொடுக்க துடிக்கிறது  மனம்
      இருப்பதைக் கொடுக்க யோசிக்கிறது தினம்
       இதுவே இந்தக் கவிதையின் மணம் )



Sunday 24 June 2012

நம்பிக்கை நட்சத்திரம்



இளைஞனே
 இல்லத்தின் எதிர்காலமே
நாட்டின்  நம்பிக்கை நட்சத்திரமே
உனக்கான கடமைகள் ஏராளம்
காத்துக்   கிடக்கின்றன பூமியில்

உனக்கான தேவைக்காய்
அடம் பிடித்து
அழுகையால் சாதிப்பது
அன்னை  தந்தையிடம் மட்டுமே
 கிட்டுகின்ற ஒன்று
வெளி உலகில்
எட்டாத ஒன்று
உனக்குத் தெரியும் ...

பெற்றவரின் வருத்தத்தை
உனக்குள்ளே உறுத்தப்  பழகு
உலகின் வருத்தத்தை
அப்போதுதான்  நீ  உணர முடியும் ..

எளிமையாய் வாழப் பழகு
வலிமை உனக்குள்ளே ஊற்றெடுக்கும்
உனக்கான சாதனை சாத்தியமாகும்...

நட்பு வட்டத்தை பெரிதாக்கு
வீண் அரட்டை தவிர்
லட்சியப் பயணம் தொடர் ...

வேகத்தோடு மோகம் கொண்ட இளைஞனே
வாகனம்   என்பது  வசதிக்காக
பாதை என்பது பலருக்காக
நினைவிருக்கட்டும் ...

சிக்னலுக்காக காத்திருப்பதை
சிரமமாய் எண்ணாதே
சீர்திருத்தத்தை ஏற்கப் பழகு ...

சில நிமிடங்களை நேசித்து
சீறிப் பாய்ந்தால் ஆபத்து
உணர்ந்து கொள் ...

உன் உயிரையும்  உறுப்பையும் மட்டுமல்ல
சகலரையும் காக்கும் பொறுப்பில்
 கவனம் கொள் ...

கையால் பிடித்து பேசுகின்ற கைபேசியை
 கழுத்தோடு அணைத்து வாகனம் ஓட்டுவது
உனக்கே நியாயமா ?

நின்று பேசாத  ஒரு நிமிடத்தில்
இந்தியாவின் தலை எழுத்தையே
மாற்றி விடப் போகிறாயா ?

சிந்தனை  சிதறலால்
சில சமயங்களில்
உன் தலைஎழுத்தே மாறி விடலாம் .

நடிகனின் நடிப்பை நேசி
நடிகனை நேசிக்க யோசி
படம் ஓடினால் கொண்டாடுவதற்கும்
ஓடாது போனால்
சோக கீதம் இசைப்பதற்கும்
நீ என்ன முதல் போட்ட பைனான்சியரா ?..
 
காதல் வலையில் சிக்கி
லட்சியத்தை விட்டு விடாதே
இயற்கையான உணர்வு தான்  என்றாலும்
இயன்றவரை தள்ளிப்போடு
உன்னால் முடியும்

முடியும் என்ற நம்பிக்கையை விதை
செடி, மரம் ,பூ,காய்,கனி  எல்லாம்
ஒவ்வொன்றாய் உருவாகும்
அது வரை பொறுமை கொள்
தேவையான உரமிடு


நீ இளைஞன் ...
வீட்டின் ,நாட்டின்

நம்பிக்கை நட்சத்திரம்
















Thursday 21 June 2012

அன்புள்ள காதலிக்கு



பெண்ணின் இனமே உனைத்தேடி
வாழ்கின்ற ஆணினம்  பலகோடி
உன்னில் புனித நீராடி
வாழ்வைத் துவக்க துணை வாடி

மனதின் சுமைகள் பாரமடி
உன்னருகில் அவைகள் தூரமடி
கண்ணின் விழியால் பார்வையடி
உந்தன் வரவால் முழுமையடி 

சல் சல்  ஒலி  உன் கொலுசோடி
என் இருதய ஒலியும்  மாறுதடி
பலப் பல சிந்தனை தோன்றுதடி
அத்தனையும் மிக இன்பமடி

வாலி உனக்கேதும்  உறவாடி
நீ எதிர்வர பலம் பாதி போகுதடி
நித்திரை நிலுவையில் உள்ளதடி
மார்கழிப் பனியிலும்  வியர்க்குதடி

பத்தரை மாற்றுத் தங்கமடி
உன் தடம் பட்டாலே வெற்றியடி

இணையத் துடிக்கும் இருமனம்


















ஆண் : பரவசம் பனித்துளி மாதிரி
               பலரகம் இருக்குது காதலி

பெண் : முற்றும் உணர்ந்த காதலா
                முழுதும் நீ சொல்லித் தர ஆவலா

ஆண் :ஆணினம்  பெண்ணினம் யாவுமே
             ஆவலுடன் இதைக் கேட்குமே
              அறம்  பொருள் அடுத்து இன்பமே
              அகிலம் அதனுள் தஞ்சமே

 பெண் :வசியம் செய்யும் வார்த்தையால்
               மனதின் ஆசைகள் கூடுதே

               தலை முதல் பாதம் யாவுமே
                நீ எதிர் வர  ஏதோ தோணுதே


ஆண் :நாணம் என்ற போர்வை தான்
              என்னிடம் ஏனடி காதலி
               உடல் பொருள் ஆவி யாவுமே
               உன்னிடம் தஞ்சம் தானடி

பெண் : விளக்கிட இயலா வார்த்தைகள் 
                என்னுள் புதைந்து தவிக்குதே
                உன்பார்வை பட்ட நாணமோ
                 தானம் செய்திட தோணுதே  

ஆண் : நோபல் பெற்ற அறிஞரும்
                நோ  பல்லான கிழவரும்
                 முற்றும் துறந்த முனிவரும்                 
                 சிக்கிச் சுழன்றிடும் சுழலிது 

பெண் : பேசிய வார்த்தைகள் போதும்
                 செயலினில்காட்டு வேகம்
                தனலாய்  கொதிக்குது தேகம்
                தடையை நீ செய் சேதம் !
 



Wednesday 20 June 2012

தமிழ் பண்பாடு காப்போம்



ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே கும்மாளம்
அதில் பரவுதுங்கோ எய்ட்ஸ் ரொம்ப பிரமாதம்
மாப்பிளை பொண்ணுகளை சேர்த்து வைப்பது கல்யாணம்
கல்யாணம் முடிக்குமுன்னே எதுக்கு இந்த கும்மாளம்

ஆணும் ஆணும் ஓரினம்
பெண்ணும் பெண்ணும் ஓரினம்
ஓரினத்தில சேர்க்கை ரொம்ப தவறுங்க
அதில் பரவுதுங்க எய்ட்ஸ் ரொம்ப அதிகங்க

ஒருவன் ஒருத்தி இல்லறம்
உறவு என்றும் சுதந்திரம்
சுதந்திரத்தை காப்பது நம் கடமைங்க
மனசை அலையவிட்டா வந்திடுமே எயட்சுங்க

 கை நிறைய சம்பளம்
வசிப்பதுவும்  தனியிடம்
தவறு செய்ய தூண்டிடுதே பலரிடம்
அந்தத் தவறாலே புகுந்திடும் நோய் சிலரிடம்

ஆப்பிரிக்கா  முதலிடம்
நாம அதுக்கு அடுத்த இடம்
எதுலயின்னு யோசிச்சு பாருங்க
அது பரவுர எய்ட்ஸ்ல தானுங்க

 மனசுக்குள்ளே ஆசை என்பது கடலுங்க
அது கரை தாண்ட வந்திடுமே புயலுங்க
மனசுக்குள்ளே புகுந்திடும் சில மயிலுங்க
அதைப் பக்குவமா தள்ளி வைக்க பழகுங்க

விபரீத விளையாட்டு



உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்
மனிதன் செய்யும் தவறாலே
அதுதான் பரவுது படுவேகம்
எய்ட்சை வெல்ல ஆயுதம்  எதற்கு ?
ஆசை துறந்தால் வருமோ எய்ட்ஸ் .?.

அவளின் மீது அவனுக்காசை
பணத்தின் மீது அவளுக்காசை
ஆசை தான் அழிவைத் தருகிறது
உணர்ந்தும் மனமோ அலைகிறது
அலையும் மனதை அடக்கி வைத்தால்
நீதான் அதற்கு எஜமானன்
அலையும் மனதை அலையவிட்டால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு
நலமாய் வாழும் முடிவை எடு.

குடும்பம் இருக்கு குழந்தைகள் இருக்கு
கண்டவரோடு சரசங்கள் எதற்கு ?
கற்பு என்பது ஒழுக்கமடா
அதில் ஆணும் பெண்ணும் அடக்கமடா
ஆசை எல்லை மீறும்  போது
தவறு நேர்ந்திடும் தன்னாலே
அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்
உன்னிடம் உள்ளது உயர்வாலே
உடலின் உணர்ச்சிகள்  இயல்பாகும்
தவறாய்த்  தீர்ப்பது நோயாகும்

உன்னை அடைந்து உறவை அடைந்து
கருவில் வளரும் குழந்தையை அடைந்து
பரவும் நோய் தான் எயட்சாகும்
இது குழந்தைக்கும் வருவது தவிப்பாகும்
நாலு சுவர்க்குள் நடக்கும் தவறு
என்று மட்டும் எண்ணாதே
உலகே அறியும் நிலை உருவானால்
அழிவே அதற்கு கிடையாது
ஆசை என்பது அளவோடு
சுகமோ கட்டிய   துணையோடு 

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்

 

அவள் சிரித்து நின்றாளே
நான் அவளிடம் சென்றேனே
என்னிடம் கேட்ட தொகையைக் கொடுத்து
அவளை அடைந்தேனே

தொழிலில் அவள் வேசி
நின்றேன் நான் கூசி
கண்ணால் அவள் பேசி
அழைத்தாள்  பேரம் பேசி

மோகம் தலைக்கேற
ஆசையும் எல்லைமீற
என் நிலை மறந்தேன்
அவள் பின் தொடர்ந்தேன்
தனியிடம் சென்றோமே

 அவள் கவசம் ஒன்று தந்தாள்
அணியுங்கள் சிறப்பு என்றாள்
தூக்கி எறிந்தேனே
அவளை சுவைத்து மகிழ்ந்தேனே

மாதங்கள்  மூன்றாச்சு
உடல் சோர்வும் உருவாச்சு
சோதனை செய்தேனே
ரிசல்ட் வந்தது எய்ட்ஸ் தானே

அவளைப்  பார்க்காதிருந்திருந்தால்
அவள் பேச்சை நானும் கேட்டிருந்தால்
எய்ட்சும் வாராதே
மரணம் சீக்கிரம்  நேராதே

எய்ட்ஸ் வந்தால் போகாது
மருந்தால் முழுதும் தீராது
வராமல் காப்பதுதான்
நம் தமிழ்ப் பண்பாடு

ஒருவன் ஒருத்தி என்றார்
அது தானே சிறப்பு என்றார்
அதனை மறந்தேனே
அதனால் அமைதி இழந்தேனே !


(அவள் பறந்து போனாளே  என்ற   பாட்டு  மெட்டில்  எய்ட்ஸால்   பாதிக்கப்பட்ட  ஒருவன் தன தவறை உணர்ந்து வருந்துகின்ற  விழிப்புணர்வுப் பாடல்.   )






Tuesday 19 June 2012

தேவை என்றும் பாதுகாப்பு


தனக்குவமை  இல்லாதான்  தாழ் பணிந்து  வணங்குகின்றேன்
பார் போற்றும் பாதுகாப்பின் நெறியுணரக்  கூறுகின்றேன்
எண்ணியது நடக்குமெனில் எள்ளளவும் கவலையில்லை
எண்ணமது  ஈடேற  ஏற்றமுடன் பாதுகாப்பு

திண்ணமது கொண்டிட்டால்  தீங்கில்லை  நம் வாழ்வில்
உண்மையிது உணர்ந்திடுவோம் அதன்பால் உயர்ந்திடுவோம்
உயிர் நிலைத்தும்  உறுப்பைக் காத்தும்  உறுதியுடன் வாழ்வதற்கு
உற்றதுணை  வேறுண்டோ  தக்கவழி  மாற்றுண்டோ ?

உரமிருக்குது  உடல்தன்னில் நினைவிருக்குது மனம்தன்னில்
ஆம் பாதுகாப்பின் அவசியம் எனும் நினைவிருக்குது மனம்தன்னில்
சில முறைகள் சீரியவைகள்  நடைமுறையில் கொண்டிடுவோம்
நாள் தோறும் உழைத்திடுவோம் ஏற்றமுடன் வாழ்ந்திடுவோம்

தொட்டால் சுடுவது நெருப்பென்று பட்டபின் பெறுவதா பாதுகாப்பு ?
சட்டத்தால் பெறுவதா பாதுகாப்பு ? உள்ளத்தில் கொள்வதே பாதுகாப்பு
நம் சீரிய செய்கையே பாதுகாப்பு  நடைமுறை வழக்கங்கள்
நல்லதொரு செயல்முறைகள்  நம் வாழ்வில் கொண்டிட்டால்
துன்பமில்லை துயரமில்லை விபத்து என்பது இனியில்லை 

இந்தக் கனவுகளை எண்ணி மகிழ்ந்திருந்த வேளையில்
நினைவுகள் மெல்ல வந்து சிந்தனையைச் சுடுகின்றது
உணர்வுகளை ஒழித்து  ஒய்ந்திருந்த வேளையில்
கடமைகள் தலைதூக்கி செயலாற்றத் துடிக்கின்றது

ஒழித்திடுவோம் விபத்துதனை என்றுநிதம் கூறினாலும்
ஓய்ந்த பாடில்லையென  மனம் வருந்தி தவிக்கையிலே
ஆறுதலாய் சில வார்த்தை என் செவியினிலே ஒலிக்கிறது
அந்த ஒலியினிலே மனமிணைந்து புதிய ராகம் இசைக்கிறது .

விபத்தே உன்னை நாங்கள் புறக்கணிக்கின்றோம்
ஏனெனில் நாங்கள் எங்களை பாதுகாப்புக்கு அர்பணித்திருக்கிறோம்
எங்களின்  மனம் தானே காவலன் அதை உணர்ந்திருக்கிறோம்
அதனால் உன்னை புறக்கணிக்கிறோம்

விபத்தே நீ பழையன தான்! உன்னை அடைபவர்தான் புதியோர்
இது நவீன யுகம் இங்கே பழமைக்கு இடமில்லை
பழமையான உனக்கும் இங்கே இடமில்லை
அதனால் உன்னை நாங்கள் புறக்கணிக்கிறோம் 

நான் ஒரு பொது உடமை வாதி என்று ஆர்ப்பரிக்கும் விபத்தே
உந்தன் பொது உடைமைத்  தத்துவத்தை கவலையின்றி
ஒருகாலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த நாங்கள் - தற்போது
பாதுகாப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்
அதனால் உன்னை  நாங்கள் புறக்கணிக்கிறோம்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
தேவன் என்றாலும் விடமாட்டேன் என்கின்ற விபத்தே
தெரியாமல் செய்தால் மட்டும் விட்டு விடுவாயா?
 அதை மட்டுமாவது மன்னிக்கின்ற குணமில்லையே
பிழை பொறுக்கும் தன்மையில்லையே

 அதனால் உன்னை  நாங்கள் புறக்கணிக்கிறோம்

விபத்தே உன்னால் நடக்க மட்டும் தான் முடியும்
விபத்து இங்கே நடந்தது எனத்தானே கூறுகின்றோம்
ஆனால் மனிதனால் நடக்கவும் முடியும்
அதை விட ஓடவும் முடியும்
எனவே நடக்கும் விபத்தை மடக்கிப் பிடித்து
மூலையில் அடைக்க எங்களால் முடியும்
அதனால் உன்னை  நாங்கள் புறக்கணிக்கிறோம்

சுவரை வைத்து நாங்கள் சித்திரம் வரைகின்றபோது
சித்திரத்தையே பெரிதாக நினைத்திருந்தோம்
சுவர் என்ற சூழ் நிலையை மறந்திருந்தோம்
நீயும் அதில் வேதனை வர்ணங்களை தீட்டி விட்டாய்
உன்றன் சூட்சுமத்தை உணர்ந்து விட்டோம்
சூழ்நிலையை திருத்தி வருகிறோம்
அதனால் உன்னை  நாங்கள் புறக்கணிக்கிறோம் 

எங்களில்  சிலர் சுயநலம் வேண்டி பொதுநலம் மறந்து
செய்கின்ற செய்கைகள்  உனக்கு சாதகமாகின்றது
சாகா வரம் பெற்றவன் என்ற இறுமாப்பும் பிறக்கின்றது
நீ வருந்த வேண்டுமானால் நாங்கள் திருந்த வேண்டும்
எனவே திருந்தி விட்டோம் தீர்மானம் நிறைவேற்றி விட்டோம்
தீர்ப்பும் அளிக்கப்பட்டுவிட்டது  உன்னைப் புறக்கணிக்க வேண்டுமென்று 

 உன்னைப் புறக்கணித்தால் போதும் நீ ஒழிந்து விடுவாய்
எங்களுக்குத் தெரியும் நீ எங்களை வைத்தே வாழ்கிறாய் !


விதவையும் மிதவையும்



பூவை தவிர்த்தால்
அவள் விதவை
பயணிகள் தவிர்த்தால்
அது மிதவை

அன்று ....
குடும்பக்கட்டுப்பாடு
செய்து கொண்டன

அரசுப் பேருந்துகள்
பஸ்  கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் 
பயணிகள் மிகவும் பாதித்தனர்

மிதவைப்  பேருந்து
அறிமுகம் செய்யப்பட்டு
பயணிகள்  ஏறாமலேயே
.மிக அதிகமாய்
 சுற்றி அலைந்தது

இன்று
தேவையின் பொருட்டு
விதவையும் பூசசூடுகிறாள்
மிதவையிலும்  கூட்டம்
நிரம்பி வழிகிறது......

Monday 18 June 2012

நிலவும்.... நீயும் நானும்


பெண்ணை  நிலவுக்கு ஒப்பிட்டு,
நிலவென்றதும்  உன் முகம்தான்
என் ஞாபகத்துக்கு ...

பகலில் நீ சூரியனாய்  தகித்தாலும்
வீட்டுத் தேவைகளைச் சொல்லி
என்னை வருத்தினாலும்
இரவினிலே எப்போதும் நிலவு போலே!
 
மாதத்தின் ஆரம்பம்
அது பௌர்ணமியின் அடையாளம்
பட்ஜெட்டில் பற்றாக்குறை
அது தேய் பிறை நிலவாகும்
நம் வீட்டில் விருந்தினர்கள்
என்னருகே நீ இருந்தும்
மேகங்கள் மறைத்தது போல்
அமாவாசை அதுவாகும் .

மீண்டும் மீண்டும்
தேய்ந்தும் வளர்ந்தும்
தெரிவது நிலவு
மீண்டும் மீண்டும்
ஊடியும்  கூடியும்
தொடர்கிறது  நம் உறவு !

தரம் காக்கும் தரக்குழு


மையத்திலிருந்து  ஓரம்
தொடுகின்ற தூரமே ஆரம்
ஆரம்  சீரானால் உருவாகுமே வட்டம்
தரத்தைச் சீராக்குமே தரவட்டம்

இழப்பை அடையாளம் காண்பதும்
அது எதனால் என்று
ஆராய்ந்து  பார்ப்பதும்
சரியான் தீர்வை ஆமோதிப்பதும்
நடைமுறைப்படுத்துவதும்  பணிகளாகும்.

குழுவின் குறிக்கோள் இதுவாகும்
தரக் குழுவின் சாதனை பலவாகும்

தனிமரம்  தோப்பாகாது  உண்மை
குழுவாய் இணைந்தால்  நன்மை
தரம் என்ற இலக்கினை எட்ட
ஆறு முதல் பத்து பேர் இணைந்து
அவரவர் துறையிலே திறம்பட
செயல்பட உருவானதே தரவட்டம்
1960 ல்  ஜப்பானில்  உருவானது
முதல் தர வட்டம்

தரமான பொருள் மலிவான விலை
தங்கு தடையில்லா விநியோகம்
தொடருகின்ற தொழில் வெற்றியாக்கிடும்
தாரக மந்திரம் இதுவாகும்
தரமே தொழிலின் ஆதாரமாகும்

உயிரை வச்சு உடலு
தரத்தை வச்சு பொருளு
உயிரும் தரமும்  ஒண்ணு
உணர்ந்தால் தொழிலில் விண்ணு

டிபெக்டை  சாட் போட்டு  சார்ட் பண்ணு
அதை போக்குற வழியை ஸ்டார்ட் பண்ணு
 குவாலிட்டி  கன்ட்ரோல்  டூல்ஸ் ஏழு
குவாலிட்டிக்கு  அது தான் வெற்றி வேலு

கையில் எடுத்தா பதறுது டிபெக்ட்
குறி  வச்சா இருக்குது எப்பக்ட்
செக் சீட்டும் டால்லி சீட்டும் ஒண்ணு
செவென் டூல்ஸ்ல இதுவும் ஒண்ணு

அரிஸ்டாட்டில் சொன்னது தத்துவம்
ஹிஸ்டோகிராம்  போட்டா மகத்துவம்
பரட்டோ  அனலிசிஸ் ஜோரு
தருமே வெர்டிக்கல் பாரு
டிபெக்ட்  வெர்டிக்கல் எல்லாம் சாயணும்
தரையோட தரையா ஆகணும்

இருக்குது காஸ் அண்ட் எபக்ட்

 பளிச்சுன்னு தெரியுது டிபெக்ட்
காஸ்  எல்லாம் காசாக மாறனும்
குவாலிட்டி பெர்பெக்டா ஆகணும்

மேன் , மிசின், மெதட்,
மெட்டீரியல்  எல்லாம் புரியுது
டிபெக்ட் போக்குற வழியும் பிறக்குது

புள்ளி வச்சு போடுவது  ஸ்கேட்டர்
டேட்டா காரலேட் பண்ணுவதும்  ஸ்கேட்டர்
டிபெக்ட் காணாம ஆக்குவதுதான் மேட்டர் 

டேட்டா  தனித்தனியா பிரிச்சா ஸ்ட்ரேடிபிக்கேசன்
 டிபெக்ட் பார்த்ததும் தோணுமே நமக்கு எமோசன்
உருவாகுமே  நல்ல சொல்யூசன்
குவாலிட்டி  ஆகுமே ப்ரொமோசன்  

எக்ஸ் அண்ட் ஆர்  சார்ட் பாரு
கன்ட்ரோல்  சார்ட்டுன்னு  கூறு
கன்ட்ரோல்   பண்ணிப் பாரு
குவாலிட்டி குழுவில சேறு
ஐ ஏ  எஸ்  ஆகணும் அதுக்கு
ஐடன்டிபை   அனலைஸ்  சால்வ்
தெரிஞ்சா   ஐ ஏ  எஸ்  பாஸ்
தொழிலுக்கு ஆகலாம் பாஸ்
 குவாலிட்டி ஆயிடும் பெஸ்ட்
உற்பத்தி திறனோ சூப்பர் பாஸ்ட் !

பதறாத காரியம் சிதறாது


பதறாத காரியம் சிதறாது
எல்லோருக்கும்  தெரியும்
பதறாமல் இருப்பதற்கு
பக்குவப்பட்டால்தான்  முடியும்.

பாமரரும்  படித்தவரும்
பாகுபாடு ஏதுமின்றி
அவரவர் சூழ்நிலையால்
பதறித்தான் வாழ்கின்றார் .

உதறித்தான் தள்ளிடவே
உறுதியாக நினைத்தாலும்

கணப்பொழுதில்  நிலைமாறும்
உணர்ச்சிதானே பதற்றமாகும்.

பதறியதால் சிதைவதுதான் வரலாறு
பதறியதால் சிறந்தவர்கள் யார் கூறு ?

விளையாடச் சென்ற பிள்ளை
வீதியிலே விழுந்து விட்டான்
பதறியே ஓடினாள்  அந்தத் தாய்
சென்றதில் தவறில்லை
பதறி ஓடியதில்
கால் இடறி விழுந்த்திருந்தால் 
பதற்றம் பாதிப்பை இரட்டிப்பாக்கும்


மாட்டுக்கு கொம்பில் பலம்
கழுதைக்கு காலில் பலம்
மனிதனுக்கு அறிவுதான் பலம்
பதற்றம் அறிவினை மழுங்கச் செய்யும் .

ஆத்திரத்தால்,  அவசரத்தால்
எதிர்பார்ப்பால், ஏமாற்ற்த்தால்
எழுகின்ற பதற்றங்கள்
தினம் தினம் வேதனைதான் .

உன்னிலடங்கா மனந்தனைக்  கொண்டு
எண்ணிலடங்கா  சாதனைகள் எவ்வாறு ? 
பதற்றம் தணிந்து பக்குவப்படுவோம்
வாழ்வு  சிறக்க வாழ்ந்து காட்டுவோம்  !

  (சீரான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தும் சிறந்த உளப்பயிற்சியின் மூலம் பதற்றத்தைத்  தவிர்த்தும்  எழுத்து,காம்  நண்பர்கள் அனைவரும் சிறந்த முன்மாதிரியாய்  திகழுவோம் )

  

Saturday 16 June 2012

சம்பள தேதி

 சம்பள  தேதி

உழைப்புக்கு முக்கிய தேதி
மாதத்து கடனை போக்கி
மானஸ்தன்  ஆக்கும் தேதி

மாட்டுப் பாலுக்கும்
மளிகை சரக்குக்கும்
வீட்டு வாடகைக்கும்
கரண்டு பில்லுக்கும்
ஸ்கூல்  பீசுக்கும்
பஸ்  பாசுக்கும்

பணத்தை பிரித்து விட்டு
கணக்கை பார்த்து விட்டால்
துண்டு விழும் பட்ஜெட்டே
துவண்டு விடும் மனமே தான்

 இதர தேவை என்ற
பட்ஜெட்டின்
மறு பரிசீலனையில்
பல தீர்மானங்கள்
ஒத்தி வைக்கபபடுவதாலே
மாதங்கள் நகர்கிறது
மாற்றம் ஒன்றும் இதிலில்லை!

(விலைவாசி  ஏற்றத்தால்  பாதிக்கப்படுகின்ற  மாதச் சம்பளக்காரர்களின்
ஒட்டு மொத்த நிலை இதுவாகத்தானே  இருக்கும் )

 

வளையத்தை வெட்டி விடு

வளையத்தை   வெட்டி விடு
சிககலெல்லாம்  தீர்ந்து விடும்
சொன்னார்கள் தோழர்கள்
  
புரியாமல நானும்தான்
வளையத்தை   வெட்டிவிட்டால்
வளையம்   சிதைந்தல்லவா
போய் விடும் என்றேன்

சிதைந்த  வளையமே  
சிக்கலுக்கு மருந்து என்றார்கள்
புரியாமல் நான் விழிக்க
புரிய வைத்தார் தோழர்தான்

தன பலத்து உழைப்பாலே
தான் பெற்ற சம்பளத்தை
முன் பெற்ற கடனுக்காய்
வட்டிக் கடன் கொடுத்தவர்கள் 
வளைத்து நின்றார்
வளையம்  போலே
 
தோழர் சொன்னார்
இறைவா !   இந்த
வளையத்தை  வெட்டிவிடு 
என் சிக்கலெல்லாம்  தீர்ந்து விடும்

தொன்று தொட்ட சொற்றொடர்தான்
என்றாலும்  தொழிலாளர்
ஒட்டு மொத்த நிலையிதுதான்

நிலை மாறும் நாள் வரவே
தன நிலை மறந்து கடனைத்தான்
 வாங்காதீர் எந்நாளும்
சிக்காதீர் வளையத்தில்  

Tuesday 5 June 2012

ஜாலி மூடு


ஜாலி .. ஜாலி .. ஜாலி
லைப்பே  என்றும் ஜாலி
ஜாலிக்கு போடதே வேலி
அப்புறம் லைப்பே காலி

ஜாலி இல்லாத வாழ்வா இல்வாழ்வு
தொடரும் துன்பம் பல நூறு
உனக்குள் இருக்கும் ஜாலி மூடு
உன்னை உயர்த்தும்  சிறப்போடு

ஜீரணிக்கத்  திறனிருந்தால் உண்ணு
சீரழிக்கும் என நினைத்தால் தள்ளு
மனதினிலே நல்லதையே  எண்ணு
நாலு பேரு மனம் குளிரப் பண்ணு

சுட்ட அப்பளம் நொறுங்கும்
பட்ட மனசு கலங்கும்
யோசிச்சா உண்மை விளங்கும் - ஜாலியை
நேசிச்சா கவலை விலகும்

ஊரோட கூடி வாழ நினைக்கணும்
உனக்குள்ளே லட்சியத்தை  விதைக்கணும்
லட்சியப் பயணத்தை  தொடரணும்
சிகரத்தின் உச்சியை   நீ எட்டணும்.




பொய் முகங்கள்



சிங்கம், புலி, கரடி
காட்டுக்குள்ள  இருக்கு
சீறும்  அதன் நினைப்பு
நாட்டுக்குள்ள எதுக்கு?
வாழும மனிதருக்கு
அந்தக்குணம்  இருக்கு
மூடி மறச்சிருக்கு
முகத்தோட சிரிப்பு


வெளிச்சம் தரும் நிலவு
விண்ணுல தான் இருக்கு
அது தேஞ்சு மறையுறது
இயற்கையின் பொறுப்பு

இயற்கையின் மாற்றம் அறிந்திடலாம்
அதன் சீற்றம் உணர்ந்து வாழ்ந்திடலாம்
மனதின் மாற்றம் புரியாது - அது
எப்போ வெடிக்கும் தெரியாது

மனத்தைக் காட்டும் கண்ணாடி
முகமென்று சொல்வது அக்காலம்
முகத்துக்கு மேலே  முகமூடி
நிஜத்தை  தொலைக்கிறோம் அதை சூடி.



Monday 4 June 2012

வேண்டாமடி உயிர் உனக்கு



சிற்பி சொன்னான்
சிலையைப்  பார்த்து
என் கலையிற் பிறந்த சிலையே
அடைந்தாய்  சிறந்த உருவே ....

இந்தச் சின்ன உளி
என் விரல் கொண்டு
உன் மீது

களி நடம்  புரிந்ததாலே
கல்லாய் இருந்த  நீயும்
பெண்ணாய் மாறி விட்டாய்
கண் கவர் அழகைப் பெற்றாய்

கடவுளும் படைக்கிறார்
நானும் படைக்கிறேன்
உனக்கு உயிரூட்டும்
சக்தி மட்டும் எனக்கில்லை
வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு
நீ உயிர் பெற்றால்
தனித்திருக்கும் உனக்கு
துணை  தேட வேண்டும்
 துணைவர்கள் தூயவர்களா
கண்டறியும் சக்தி எனக்கில்லை

இந்த மண்ணில் உள்ளோர்
புறத்தைக்  காட்டி
அகத்தை மறைக்கும்
அற்புதக் கலையில் வல்லவர்கள்
சிற்பக் கலை பயின்ற எனக்கு
அந்த மர்மக் கலை ஏனோ புரியவில்லை
அதனால் நீ ஊனமாவதை விரும்பவில்லை

 பொன் தருவார் என்பதாலே
புண் பட்ட அவளைக் கூட
பெண் கேட்டுச் செல்கின்றார்
மாடிப்படியேறி
பண பட்டு நின்றிருந்தும்
பல பெண்கள் பெண் கேட்க வழியில்லாமல் ....

வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு

பொது வாழ்வில் நேர்மைக்கோ
பஞ்சமாகிப் போனதனால்
போய் விட்டார் மகாத்மாக்கள்
பொது வாழ்வைத் துறந்து விட்டு

பூவுக்கும்  பொட்டுக்கும்
ஆசைப் பட்டு
பெற்றோர் போட்ட
நகைகளை கணவனுக்கு
கேட்ட போதெல்லாம்  தந்து விட்டு
கையில் குழந்தையுடன்
கசிகின்ற  கண்ணீருடன்  பல பெண்கள்
அதனால்
வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு


சிலை அழுதது கண்ணீர் விட்டு
தன்னருகே நடந்து சென்ற
பெண்ணைப் பார்த்து
பெண்ணின் அவலங்களை நினைத்தா
இல்லை
தனக்கு உயிரில்லையே என்று