மனதின் வெளிப்பாடு


Sunday 20 January 2013

தரம் தரும் பென்னர்

தரம் தரும் பென்னர்

ஆனந்ததத்தை  அள்ளித்தரும் உயர்தரம் - அதை 
ஆனந்தமா  ஆக்கிடுவோம் நிரந்தரம் 
சந்தையிலே போட்டிதானே  நிலவரம் 
தரம் எப்பவுமே விற்பனைக்கு துணை வரும் 

அப்போ  பொருள் செய்யும் முறை 
                                         பழமையாக இருந்திச்சு
அது போட்டியில்லா சந்தையால  ஜெயிச்சுச்சு 
தரம் இருந்த போதிலும் அது குறைஞ்ச போதிலும் 
நாம வச்சதே விலை  அன்று  மறுப்பவர் இல்லே 
தினம் பெட்டி பெட்டியா  பொருள் சேதம் ஆகுண்டா  
அதைப் பார்க்கும் போதெல்லாம் 
நம்ம நெஞ்சு வலிக்குண்டா.....

அந்தக் கால முறைகள் எல்லாம் 
மலையேறிப் போச்சு இப்போ 
சிஸ்டம் பலவும் கற்கச் சொல்லுது இப்பத் தொழிலு 
தரமுன்னு  சொல்லுறாங்க  சான்று பல கேக்குறாங்க
ஒண்ணு  இருந்து  ஒண்ணு  குறைஞ்சா  விட்டுப் போறாங்க 
தொழிலு  எல்லாமே  ஒரு கண்ணாமூச்சி - அதில் 
தரம் இல்லாத பொருள் காணாப் போச்சு 
விற்பனைகள் உலகமெங்கும் பரவியாச்சு 
தொழிலில் நானுதான் எனச்  சொல்ல ஆளில்லே 
ஒருத்தன் வீழுறான்  பலர் உள்ளே நுழையுறான் 
என்னடா தொழிலு  இதில் எத்தனை புதிரு 
தரம் இருந்தால் லாபம் அதை இழந்தால் பாவம் 


பென்னரில  தொழிலு  எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சு 
ISO ங்குது  5S ங்குது  TPM ங்குது
எல்லாம் இருந்து இன்னும் முன்னேற வழி  என்னான்னு 
ரொம்ப அதுவும்  தேடிப்  பார்க்குது 
பொருள் தரத்தை உயர்த்திட பென்னர்  சலிப்பதே இல்லை 
இழப்பை குறைத்திடும் முறை இருக்குது உள்ளே 
பென்னருக்கு போட்டி கண்டு பயமே இல்லே 

ஆண்டு அறுபதை நெருங்கும் பென்னரு 
தொழிலில் வின்னரு பேர் பெற்ற பென்னரு 
JK  கூடத்தான் இணைஞ்ச பென்னரு 
உலகத் தரத்துக்கு பொருள் படைக்கும் பென்னரு !