மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

மானிட வாழ்வும் தரமும்




அகம் ,புறம் மனித வாழ்வின் இருகூறு
அவரவர் வாழ்வின் நிலைகளோ வெவ்வேறு
புற வாழ்வின் தேடலுக்கு ஆசைகளோ பலநூறு
அகவாழ்வின்  தேடலுக்கு ஆன்மாவே உட்கூறு

புறவாழ்வின் பூர்த்தி பொருளாதாரம் சார்ந்தது
அகவாழ்வின் கீர்த்தி அழியாத்தரம் வாய்ந்தது
நம்மின் அகத்தை ஆராய்ந்தால் கிட்டுவது ஞானம்
பொருளின் அகத்தை ஆராய்ந்தால் கிட்டுவது தரம்

ஊர்கூடி இழுத்தால் தேர் நகரும்
குழு கூடி சிந்தித்தால் தரம் உயரும்
மண்ணை தோண்டி பெறுவது நீராகும்
எல்லை தாண்டி விரிவது தரமாகும்

நிலைத்த தரத்தில் நீங்காதிருப்பது  உயர்வாகும்
நினைத்த இடத்தை கொண்டு சேர்ப்பது தரமாகும்
தரமான பொருள் சந்தையில் எளிதில் விலையாகும்
தளரா முயற்சி சாதனை படைத்து அரங்கேறும்
.




No comments:

Post a Comment