மனதின் வெளிப்பாடு


Monday 28 May 2012

ஒரு ரசிகையின் கடிதம்





இளைய தளபதியே 
தமிழ்த்திரையின் 
இனிய தளபதியே 
 நாளைய தீர்ப்பே  உன் வருகை 
ரசிகன் கண்டாள் இந்த ரசிகை 
செந்தூரப் பாண்டியாக, தேவாவாக உருவெடுத்தாய் 
 ராசாவின் பார்வையாலே என்னுள்ளே 
விஷ்ணுவாக அவதரித்தாய் 

சந்திரலேகாவைக் கண்ட 
கோயம்புத்தூர் மாப்பிள்ளையே - இந்தப் 
பூவே உனக்காகத்தான் 
வசந்த வாசலும் உன் வருகைக்ககத்தான் 
தமிழ்த் திரையின் மாண்புமிகு மாணவனே 
செல்லமான செல்வாவே 
உன்னைச் சந்திக்க 
காலமெல்லாம் காத்திருப்பேன் 
உன்மீது கொண்ட அன்பு 
அந்த லவ் , டுடே  மட்டுமல்ல 
ஒன்ஸ்மோர்  என்று கேட்கும் ஓயாது- உன்னை 
நேருக்கு நேர் சந்திக்கும் ;ஆவலோடு 

அந்த அன்புக்கு 
காதலுக்கு மரியாதை தந்தாய் 
கனவில் நான் நினைத்தேன் வந்தாய்  நீ 
பிரியமுடன் கை குலுக்கினாய் 
நிலாவே வா என்றேன் 
இதைப் பார் என்றேன் 
துள்ளாத  மனமும் துள்ளியது 
என்றென்றும் காதல் வேண்டும் என்றேன் 
நெஞ்சினிலே அன்பை ஊட்டிய மின்சாரக் கண்ணாவே - என் 
கண்ணுக்குள் நிலவானாய் 
இன்னும் குஷியானேன் 
பிரியமானவளே என்று அழைப்பாய்  
என எதிர்பார்த்தேன் 
நட்புடன் பிரண்ட்ஸ்  என்றாய்  - என் 
காதலைக் கத்தரித்த பத்ரியே 
அன்புக்கு அதிசியம் காட்டிய ஷாஜஹானே 
தமிழன் உணர்வை ஊட்டுகின்ற யூத்தே 
பகவதி பெயர் சொல்லும் வசீகராவே 
புதிய கீதை சொன்ன திருமலை நாயகனே 

உதயாது என்னுள்ளே காதல் என்று 
தள்ளி நிற்கும் கில்லியே 
நான் விரும்பும் மதுர மல்லியே 
திருப்பாச்சி அரிவாளுடன
உன் உருவம் கண்டு நான்    திகைத்தேன் 
சச்சின் போன்ற சாதனை நாயகனே 
சிவகாசி பட்டாசாய் நீ வெடிக்கையிலே 
என்னுள்ளம் சொல்லியது 
ஆதியிலே நீ போக்கிரி இல்லை 
அழகிய தமிழ் மகன் நீ 
வேட்டைக்காரன்  வில்லுக்குச் சிக்காத  குருவி நீ
ஆனந்தம் அள்ளித்தரும் அருவி நீ 
தமிழ்த் திரை உலகையே உலுக்கிடும் சுறா நீ என்று 
அந்த உராய்வில் கண் விழித்தேன் 
என் கண்ணெதிரே வேலாயுதம் ஏந்திய காவலனாக 
என் இளைய தளபதி  
 


தாய்மொழி நேசி



கால்குலேட்டேர்  காலமெல்லாம்  அப்போ 
கம்ப்யூட்டர்  காலம் தானே இப்போ 
கத்துக்கிட்டா கலக்கிடலாம் 
உலகம் பூரா சுத்திடலாம் 
 நம்ம மூளைக்குத்தான்   மார்க்கெட்டு  இபபோ 

நெட்டுல தான் இருக்குது பல விஷயம் 
நாம நினைச்சாக்க  மனசில அது பதியும் 
கெட்டதெல்லாம்  விட்டுபுட்டு 
நல்லதெல்லாம் கத்துகிட்டு 
நாடு போற்ற வாழ்ந்திடனும்  இப்போ 
 
கீ போர்டும்  மௌசும் ஆச்சு பழசு 
டச் ஸ்க்ரீன் தானே இப்போ புதுசு 
லேப் டாப்பை  வச்சுக்கிட்டு 
வீட்டுலேயே இருந்துகிட்டு 
வேலையெல்லாம் செஞ்சுடலாம் இப்போ 

MNC  வந்திருக்கு நிறைய 
அதில் ஆங்கிலத்தில் ஆற்றிடனும் உரைய 
தாய்மொழியாம் தமிழ்மொழியை 
உலகமெல்லாம் போற்றிடவே 
தயங்காது பேசிடனும்  வெளியே 
 
 

 


சேர்ந்து கொள்கிறேன்




அப்பா ...
அம்மா இருந்தவரை 
எங்களுக்குக் கவலையில்லை 
அம்மா இறந்ததனால் 
எங்களுக்கு தொல்லை 

மூன்று மக்களும் 
முறை வைத்து உங்களை 
பராமரிக்க ஒப்பந்தம் 

பேரக் குழந்தைகளோடு 
கொஞ்சி விளையாடும் 
ஆசை உங்களுக்கு 

தாத்தா என்று  விளையாடுகிறவர்கள் 
சமயத்தில் எதையாவது  வாங்கித் 
தா .. தா   என்று  நச்சரிக்கிறார்கள் 
எதையும் தராத தாத்தாவை  
விரட்டியடிக்கிறார்கள்  
 
 இந்த  வயதிலும் 
இப்படிச் சாப்பிடுகிறாரே 
அவளின் வெடிப்பேச்சில் 
வெடிக்கிறது சண்டை தினம்தோறும் 

என் இல்லாமை 
அவளின் மனதில்லாமையால் 
அவ்வப்போது 
விசுவரூபம்  எடுக்கிறது 

பட்ஜெட்டில் பற்றாக்குறை 
எப்படிச் சமாளிக்கலாம் 
விவாதத்தில் எப்போதும் 
உங்களையே 
முன்னிலைப்படுத்துகிறாள் 

எங்களை வளர்த்து ஆளாக்க 
எவ்வளவோ  செலவழித்தீர்கள் 
உங்களுக்கென்று  எதையும் 
ஏன்  சேர்த்து வைக்கவில்லை 

அப்பா சொன்னார் அமைதியாக 
சேர்த்து வைத்திருக்கிறேன் 
அனாதை இல்லத்து முகவரி 
நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன் 
நீங்கள் சோர்ந்து போகாதிருக்க 
விரைவில் சேர்ந்து கொள்கிறேன் 
 
 
 
 
 

 

ம (னி)தம் புனிதமானது


நான் இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன்
என் நாட்டின் மீது பற்று அதிகமாயிருக்கிறது 
நான் ஒரு மதத்தில் பிறந்திருக்கிறேன்   மதத்தின் மீது நம்பிக்கை வளர்ந்திருக்கிறது 
என் மதம் தான் சிறந்ததென்று எண்ணுகின்றேன் 
சிந்தனையின் சுதந்திரம் நம்பிக்கையை வளர்த்திருக்கிறது 
நம்பிக்கையை பிறர் மீது திணிப்பதோ 
மற்றவர் புண்பட எடுத்துரைப்பதோ 
வேதத்தைக் காட்டி பேதத்தை வளர்ப்பதாகும் 
மதம் மனிதனை மறைத்திருக்கிறது 
மனித நேயத்தை குறைத்திருக்கிறது 
மதத்தை விட்டு மனிதனை நேசிப்போம்  
சகல உயிர்களையும் சமமாய் பாவிப்போம் 
இறை நம்பிக்கை அவசியம் 
ஒன்றே கடவுள் சத்தியம் 

Tuesday 8 May 2012

குறைப்போம் செலவினம்



செலவும் கூடுமா முயன்றால்  செலவும் கூடுமா
செலவும் கூடினால் செய்யும் தொழிலும் நிலைக்குமா

அழிவைக் கொடுப்பதே அதிகம் செலவினம்
அதனைத் தடுப்பதே தரம் தரும் சாதனம்
பரவுது உலகெல்லாம் ஓடுது  தடையெல்லாம்
ஓட்டுவோம்  தடைகளை விரட்டுவோம் செலவினை
                                                  (செலவும் ....)
அவரவர் தொழிலினில் அவரவர் சிறந்திட்ட்டால்
அனுப்பிடும்  பொருளினால் தரம் பெறச் செய்திட்டால்
இயந்திரப் பழுதெல்லாம் வருமுன்னர் தவிர்த்திட்டால்
விபத்தில்லா நிலைதனை உணர்ந்து நாம் செயல்பட்டால்
                                                  (செலவும் ....)

இஷ்டமாய் பணியினை இணைந்து நாம் செய்திட்டால்
கஸ்டமர் தேவையை உணர்ந்து நாம் செயல்பட்டால்
கடுமையாய் உழைப்பதை எளிமையாய் மாற்றிட்டால்
கவலையைப் போக்கிடும் யோசனை குவிந்திட்டால்
                                                 (செலவும் ....)

முயன்றால் முடியும்தான் எதையும் முயன்றால் முடியும் தான்
முறையாய் முயன்றிட்டால் முழுதாய் பணியும் செலவும்தான்


 

Monday 7 May 2012

இழப்பை சிதறிடிப்போம்



தரம் தேடி வந்த  தேடி வந்த கூட்டமே
தரம் உயர்ந்திடத்தான்  நாமும் படு பட்டமே
தரம் எட்டும் வரை கண்ணில் இல்லை தூக்கமே
தரம் எட்டியதும் தீர்ந்து விடும் வாட்டமே

அடங்காக்  குதிரையைப்போல
இருந்தன இழப்புகள் தானே
அட மேல கீழ கோடு போட்டு
தரம் பிரிச்சோமே.....
எதனால் வந்தது எப்படி வெல்வது
என்று எண்ணி நாளும் நாமும்
பணியும் செஞ்சோமே
இழப்பை படத்தில காட்டி
குழுவாய் கலந்தே பேசி
இன்னும் கூட்டுறோம் தரத்தை
                      (  தடைகள் தன்னால் ஓடுது
                         தரமும் நன்றாய் கூடுது)

படுத்தாத் தூக்கமும் வல்ல
தொழிலில் பலப்பல தொல்லை
ஒன்னு போய் ஒண்ணு வந்து
ரொம்ப வாட்டுச்சே
எதயும் சந்திக்க என்று சிந்திக்க
கற்றுத்தந்த தரக்குழுவில்
முழுதாய் சரணடைந்தோமே
குழுவாய் இணைந்தது  கண்டு
குழப்பம் தீர்ந்தது நன்று
இதயம் குளிர்ந்து வென்று
                       (  தடைகள் தன்னால் ஓடுது
                         தரமும் நன்றாய் கூடுது)
பலநாள் உச்சத்தில் இருந்து
சில நாள் பொத்துன்னு விழுந்தால்
கன்சிஸ்டன்சி  என்ன ஆச்சு
கலங்கி நின்னோமே
டூல்ஸை கையில கொடுத்து
ரூல்ஸை மனசில பதித்த
தர மேதைகளின் வழித்தடத்தை
மறக்க மாட்டோமே
இழப்பை சிதறிடிப்போமே
                        ( தடைகள் தன்னால் ஓடுது
                         தரமும் நன்றாய் கூடுது)



நம் நாடும் தரமும்


மதத்தால், இனத்தால்
மொழியால், கலாச்சாரத்தால்
மாறுபட்ட்டலும்
ஒன்று படுகின்றோம்
இந்தியன் எனும் உணர்வால்

உற்பத்திப் பொருளால்
உருவாகும் விதத்தால்
உதிக்கின்ற சூழலால்
உபயோகிக்கும்  முறையால்
மாறுபட்டாலும்
ஒன்று படுகின்றோம்
தரம் எனும் உணர்வால்

இந்தியன் உணர்வு ஊற்றெடுத்தால்
இந்தியா இன்னும் செழிக்கும்
தரத்தின் உணர்வு ஊற்றெடுத்தால்
அகிலமே இன்னும் செழிக்கும்

மதங்களின் கூட்டுக்கலவை
மூவர்ணக்கொடியின் பெருமை
காவி இந்து
வெண்மை கிறிஸ்துவம்
பச்சை இஸ்லாம்
நடுவில் சுழலும் சக்கரம்
நம் அன்னை பூமி

தரத்துக்கும் சான்றாகும்
நம் மூவர்ணக்கொடி
மேலிருக்கும் காவி
வீண் விரயத்தின் எச்சரிக்கை
அப்பழுக்கற்ற  வெண்மை
அழியாத் தரத்தின் மேன்மை
செழித்திருக்கும் பச்சை
உற்பத்தியின் திறன்
நடுவில் சுழலும் சக்கரம்
தரம் தரும் குழுக்கள்

ஏற்போம் உறுதிமொழி
தரம் கற்றுத்தந்த
ஜப்பானை வாழ்த்துவோம்
வருங்காலத்தில்
ஜப்பானையும் வீழ்த்துவோம்


தரம் சிறக்க


ஒவ்வொரு மனிதருமே சொல்லுவதே

ரமென்றால் பொருளோட உயிர்தானே
ஒவ்வொரு பொருட்களுமே சொல்லுவதே
தரம் போனால் தங்காது சந்தையிலே
குழுவாய் இணைதல் வேண்டும் நம் தொழிலில்
குறைகள் எளிதாய்  தீரும் வெகு விரைவில்
                                                தரமே  ஓ  தரமே  நீ கூடி விடு
                                                திறனே உற்பத்தித் திறனே  நீ பெருகி விடு

குழுவாய் கூடி விவாதிப்போம்
குறைகள் பற்றி யோசிப்போம்
ஒட்டுமொத்த  வளர்ச்சி பற்றி
நாள் முழுதும் சிந்திப்போம்
எந்த தொழிலில் தடையில்லை
எந்த  செயலில் குறைஇல்லை
தடைகள் போக்கும் பணிகளெல்லாம்
திறனைக் கூட்டும் வழிமுறைகள்

குறை நீக்கும் குழுக்கள் தானே
நிறுவனத்தில் உயர்வாகும்
குழுவில் அங்கம் நீயும் என்றால்
உன்னை  வாழ்த்திப் புகழ் பாடும்
யாருக்கில்லை சிந்தனைகள்
ஆக்கப்பூர்வ  சிந்தனைகள்
குழுச் சிந்தனையில் வரும் துளிகளெல்லாம்
பெரும் உயர்வுக்கு வழி காட்டும்
நம் குறை உணர்ந்தால்
அதை தினம் முயன்றால் 
நல்ல தீர்வும் வெளியாகும்
                                                தரமே  ஓ  தரமே  நீ கூடி விடு
                                               திறனே உற்பத்தித் திறனே  நீ பெருகி விடு


கற்ற பாடம் பலவாகும்
பெற்ற தீர்வு சிலவாகும்
முயன்று நாமும் உழைத்தால்தானே
சிந்தையெல்லாம் செயலாகும்
வளரும் நாடு நாமென்ற
தாழ்வு இன்னும் நமக்கெதற்கு
முடியும் என்று போராடு
உயர்ந்த தரக் குழுவோடு

வெற்றி என்ற இலக்கு எல்லாம்
அனைவருக்கும் பொதுவாகும்
நாம் பெற்றிடுவோம்  என நினைப்பதெல்லாம்
அவரவர் வாழ்வின் இயல்பாகும்
திறமை இருக்கு உன்னோடு
செவென் QC TOOLS  ன் துணையோடு
நம் கரம் இணைந்தால்
அது தரம் கொணர்ந்தால்
தொடர் வெற்றியும்  எளிதாகும்
                                               தரமே  ஓ  தரமே  நீ கூடி விடு
                                               திறனே உற்பத்தித் திறனே  நீ பெருகி விடு


வாழ்வு உன் கையில்




எந்த ஊரில்
எது பிரசித்தம்
மனம் அதிலே நாட்டம்
உண்ணும் உணவோ
உடுத்தும் உடையோ
மலிவின் பக்கம்  ஓட்டம்

கனவின் பலனை
நிஜமாய் நம்பி
களித்திருக்கும் ஒரு கூட்டம்
திறமையிருந்தும்
துணிவைஇழந்தால்
வாழ்வில் வந்திடும் வாட்டம்

உடமைஇருந்தும்
ஒழுக்கம் குறைந்தால்
தொழிலில் ஏற்படும் நஷ்டம்
இப்படி நடக்கும்
அப்படி நடக்கும்
எண்ணுவோர்  மனதில் பதட்டம்

உண்மையிருந்தும் 
உறுதி குலைந்தால்
வாழ்வில் ஏற்படும் கஷ்டம்
வாட்டும் வறுமையில்
வாடி விடாமல்
முயன்றால் பலனும் கிட்டும்

நம் நிலை உணர்ந்து
தன்னலம் மறந்தால்
இலட்சியம் நிச்சயம்  எட்டும்
உணர்வால் உயர்ந்து
உழைப்பால் சிறக்க
வழித்துணையாவது  திட்டம்


இருப்பதைக் கொண்டு
சிறப்புற வாழ்வது
அவரவர் வாழ்வின் இஷ்டம்