மனதின் வெளிப்பாடு


Friday 29 June 2012

ஜடமாக உருமாருங்கள்



பெற்றோர்களே , பெரியவர்களே
நீங்கள் பெற்றீர்கள்,வளர்த்தீர்கள்
உங்கள் கடமையை
உங்களால் முடிந்த வரை
எங்களுக்கு செய்தீர்கள்
அதற்காக எங்களின்  கடமையை
எங்களின் பிள்ளைகளுக்கு
செய்யும் உரிமையில் தலையிடாதீர்கள்..

உங்களின் காலத்துக்கும்
எங்களின்  காலத்துக்கும்
பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும்
நிறைய ..........   இடைவெளி .

இடைவெளியை காரணம் காட்டி
உங்களுடனான இடைவெளியை
அதிகரிக்காதீர்கள்

நிகழ் காலத்தோடு
ஒட்டி வாழப் பழகுங்கள்
உங்களுக்கு பிடிக்கா விட்ட்டலும் ....

நிம்மதியும் சந்தோசமும்
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் சேர்த்துதான்

மனைவியின் மந்திரம்
என்று பறைசாற்றுகின்றீர்கள் 
எந்திரமாய் எங்களை
ஏன் மாற்றுகின்றீர்கள் ?

மூன்று வேளை சோற்றுக்கா
இங்கு இருக்கிறோம் ?
முதிர்ந்த வயதில்
அன்பையும அரவணைப்பையும்
எதிர்பார்த்துதானே?
கேள்வி நியாயம் தான்
எங்கள்  வீட்டு விசயங்களில்
எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைக்கும்
பண்பால் அல்லவா அன்பு
அடைபட்டுபோகிறது..

நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கும் போது
உங்களின் ஆதிக்கம் - நீங்கள்
எங்களைச் சார்ந்திருக்கும் போது
எங்களின் ஆதிக்கம் 
ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகின்றீர்கள் ?
வாழ்க்கை ஒரு வட்டம்
ஒருகட்டத்தில் ஆட்டம் மாறும் போது
ஏன் வாட்டம்  அடைகிறீர்கள் ?

கடைசிவரை நான்தான் ...
நீங்கள் எண்ணினால்
உங்களின் எதிர்காலத்துக்கு
முன் கூட்டியே திட்டமிடுங்கள்
யாரையும் சாராதீர்கள்
தள்ளி நின்று பிள்ளைகளை ரசியுங்கள்

அதற்கு வழியில்லைஎன்றால்
ஜடமாக உருமாருங்கள்
உணர்வை புறம் தள்ளுங்கள்
ஏனென்றால்
கலாச்சாரச் சீரழிவால்
முந்தைய தலைமுறையை
அலட்சியப்படுத்தும்
நிறைய ஜடங்களே  உருவாகின்றன
எங்களையும் சேர்த்து .... 










No comments:

Post a Comment