மனதின் வெளிப்பாடு


Wednesday 20 June 2012

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்

 

அவள் சிரித்து நின்றாளே
நான் அவளிடம் சென்றேனே
என்னிடம் கேட்ட தொகையைக் கொடுத்து
அவளை அடைந்தேனே

தொழிலில் அவள் வேசி
நின்றேன் நான் கூசி
கண்ணால் அவள் பேசி
அழைத்தாள்  பேரம் பேசி

மோகம் தலைக்கேற
ஆசையும் எல்லைமீற
என் நிலை மறந்தேன்
அவள் பின் தொடர்ந்தேன்
தனியிடம் சென்றோமே

 அவள் கவசம் ஒன்று தந்தாள்
அணியுங்கள் சிறப்பு என்றாள்
தூக்கி எறிந்தேனே
அவளை சுவைத்து மகிழ்ந்தேனே

மாதங்கள்  மூன்றாச்சு
உடல் சோர்வும் உருவாச்சு
சோதனை செய்தேனே
ரிசல்ட் வந்தது எய்ட்ஸ் தானே

அவளைப்  பார்க்காதிருந்திருந்தால்
அவள் பேச்சை நானும் கேட்டிருந்தால்
எய்ட்சும் வாராதே
மரணம் சீக்கிரம்  நேராதே

எய்ட்ஸ் வந்தால் போகாது
மருந்தால் முழுதும் தீராது
வராமல் காப்பதுதான்
நம் தமிழ்ப் பண்பாடு

ஒருவன் ஒருத்தி என்றார்
அது தானே சிறப்பு என்றார்
அதனை மறந்தேனே
அதனால் அமைதி இழந்தேனே !


(அவள் பறந்து போனாளே  என்ற   பாட்டு  மெட்டில்  எய்ட்ஸால்   பாதிக்கப்பட்ட  ஒருவன் தன தவறை உணர்ந்து வருந்துகின்ற  விழிப்புணர்வுப் பாடல்.   )






No comments:

Post a Comment