மனதின் வெளிப்பாடு


Monday 1 October 2012

தரம் உயர



மனசுக்குள்ள தரத்தை வச்சு
பொருளும் செஞ்சா வரும் சிறப்பு
வேண்டாண்டா சாக்கு போக்கு

பொருளும் நல்லா இருக்கணும்
தொழிலில் சிறப்பைக் காட்டணும்
வாடிக்கையாளர் எல்லாம்
வந்து வந்து கேட்கணும்
நம் பொருளை கேட்கணும்         
மனசார வாழ்த்தணும்
தரமிருக்கு திறனிருக்கு
தயக்கம் இன்னும் உனக்கெதற்கு?
வேண்டாண்டா சாக்கு போக்கு

அழிகின்ற உடலடா
அழியாதது தரமடா
புகழைக் கூட்டும் தரமடா
புரிஞ்சுகிட்டா  உயர்வடா
தரத்தை வச்சு உயர்ந்தவர்கள்
தரணியிலே பலரடா
இருக்குடா இருக்குடா
உனக்குத் திறமை இருக்குடா
நிறுத்துடா நிறுத்துடா
ரிஜெக்டை எல்லாம் நிறுத்துடா
வேண்டாண்டா சாக்கு போக்கு
                                                                  
5S   இருக்குடா                                                           
இடத்தைச் சுத்தம் ஆக்குடா

OHSAS  இருக்குடா
பாதுகாப்பு சிறப்புடா
TPM  இருக்குடா
முழுத்திறனை எட்டுடா 
தரவட்டம் பாருடா
அதுல நீயும் சேருடா
சிந்தனையைத் தூண்டுடா
சிக்கலெல்லாம் தீருடா
கூட்டுடா கூட்டுடா
தரத்தை இன்னும் கூட்டுடா
வேண்டாண்டா சாக்கு போக்கு






No comments:

Post a Comment