மனதின் வெளிப்பாடு


Wednesday 3 October 2012

மத்திய தொழிலாளர் கல்வி வாரியம்



வளர்ச்சிக்கு வழிகாட்டும் வாரியங்கள்
வளமுடனே செழிக்கட்டும் அவனியிலே
பலனெல்லாம் பரவட்டும் விரைவினிலே
பாரெல்லாம்  போற்றட்டும் உயர்வினிலே

 உழைப்பவர் வாழ்வில் வளம் காண
உற்பத்தியில் அவரும் திறன் காண
கல்வியில் மேம்பாடு அவசியமே
அனைவரும்  பெற்றால் வரும் நலனே

கருத்தில் இனிதே இதைக்கொண்டு
மத்திய அரசின் துணை கொண்டு
மகிழ்வுடன் பணியாற்றும் வாரியம்
மத்திய தொழிலாளர் கல்வி வாரியம்

ஆண்டுகள் ஐம்பது இனிதாக
பொன்விழாக் காண்பது  நிஜமாக
வெற்றியுடன்  பூரிக்கின்றது வாரியம்
என்றென்றும் குறையாது அதன் வீரியம்

தொழிலாளர்களை மாணவர்களாக்கி
ஆசிரியர்களாய்  உருமாற்றி
அவரவர் ஆலையில் பணி  சிறக்க
 வழிகாட்டும்  உன்னதமிக்க வாரியம்

கட்டணம் ஏதுமின்றி கல்வியை கற்பிக்கும்
கண்ணியமிக்க வாரியம்
தன்னலம் கருதாப் பொதுத்தொண்டால்
பிறர்நலம் பேணுகின்ற பெருமை மிக்க வாரியம்

தொலை நோக்குப் பார்வையாலே
தொழிலாளர் தொல்லை நீக்கி
அக்கறையோடு அககரை சேர்க்கும்
அன்புள்ளம் கொண்ட வாரியம்

வாரியத்தின் பணிகள் சிறந்திடவே
குருவாயிருந்து கல்வி புகட்ட
ஐவர் குழுவுடனே அமைந்தது
மதுரை மண்டல வாரியம்

பயிலும் வாய்ப்பை பெற்றது
நாங்கள் பெற்ற பாக்கியம்
ஐந்தருவியில் குளித்தது போல் குளுமை
ஐந்து ஆசிரியர்களின் பணியும் அருமை

கற்றுத்தரும் முறையோ எளிமை
சொல்லி முடியுமோ இந்தப் பெருமை
தொடரட்டும் வாரியத்தின் பணி
நீங்கட்டும் கல்வியில்லாப் பிணி

ஓங்கட்டும் தொழில் உறவுகள் இனி
ஒலிக்கட்டும் புதுயுகத்தின் தொனி

(மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் ஐம்பது ஆண்டு நிறைவைப் பாராட்டி ,தொழிலாளர் கல்வி ஆசிரியர் பயிற்சியின் போது எழுதியது)







No comments:

Post a Comment