மனதின் வெளிப்பாடு


Monday 1 October 2012

வளை காப்பு




தாய்மையின் பூரிப்பை
பகிர்கின்ற நிகழ்வு

மங்கள நாண்  பூட்டி
மணாளனின் கரம் பற்றிய
மகிழ்வின் அடையாளத்தை ...
வளரும் வாரிசை ...
வளையின் ஓசையாலே
வாழ்த்துகின்ற நிகழ்வு

கருவில்
உருவைச் சுமப்பவளின்
கரம் தொட்டு வாழ்த்துகின்ற
இனிய நிகழ்வு
வளைகாப்பு




No comments:

Post a Comment