மனதின் வெளிப்பாடு


Monday 22 October 2012

தியாகத் திருநாள் வாழ்த்து




இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான்.

இறைவனுடைய படைப்பிலேயே  சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால் படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.

நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.

நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை,  இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.

செல்வம், அகம்பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவக் கூடுகளை  சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்

.இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்

இவ்வு லகை படைத்து பரிபாலிப்பவனே
அளவற்ற அருள் பொழிபவனே
 நிகரற்ற அன்புடையோனே
தீர்ப்பு நாளின் அதிபதியே
உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக.

அன்பு, பாசம், பரிசு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்!

நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை, இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமன்றி இனிவரும் நாட்களிலும் எல்லாருக்கும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம்.
எல்லாம் வல்ல இறைவனே.. உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!
நன்றியும், கரு ணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக்கச் செய்வாயாக .

எம்.ஏ.ஆர்.அப்துல்லா  நிர்வாகி, பெரியமேடு பள்ளிவாசல்

No comments:

Post a Comment