மனதின் வெளிப்பாடு


Monday 1 October 2012

கனவு காணக் கற்றுக் கொள்













கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை இல்லை ஒத்துக்கொள்
போதுமென்ற மனம் அன்று

கனவு காணக் கற்றுக் கொள்
கடின உழைப்பை ஒத்துக் கொள்
போட்டியை சமாளிக்கும் குணம் இன்று

உணவு உடலுக்கு
கனவு வாழ்வுக்கு
உணர்வு உயர்வுக்கு
உழைப்பு கனவின் உயிர்ப்புக்கு

கனவு என்பது அஸ்திவாரம்
செயல் திறன்  அதன் கட்டுமானம்
களிமண் அஸ்திவாரம் சரியும்
கட்டாந்தரை எண்ணம் போல் உயரும்
களிமண்ணில் கால் புதையும்
அடியெடுக்க மனம் தளரும்
தளம் என்பது பிரதானம்
மனதின் அடித்தளமே  ஆதாரம்

காலை .. மாலை ..இரவு
வந்திடுமே என்றும் தொடர்ந்து
தடுமாற்றம் .. தோல்வி .. சரிவு
தளராத மனமோ உயர்வு

ஒவ்வொரு நாளும் விடியும்
முயன்றால் எதுவும் முடியும்
இலட்சியக் கனவும் மிளிரும்

தொலை நோக்குப் பார்வைதான் கனவு
தலை தூககும்  நிகழ்வுதான் உணர்வு
 திறமைகளை உண்மையுடன் உணர்ந்து
சூழ்நிலையை மிகச்சரியாய் புரிந்து
தேவையான திறமைதனை வளர்த்து
செயல்பட்டால் நனவாகும் கனவு

நேற்றைய கனவுகளின் செயல்பாடு
இன்றைய வெற்றிகளின் வெளிப்பாடு
இன்றைய கனவுகளின் புறப்பாடு
நாளைய சரித்திரத்தில் புகழோடு


 






No comments:

Post a Comment