மனதின் வெளிப்பாடு


Friday 19 October 2012

தொலைந்த கரண்டை மீட்டுத் தாருங்கள்




நிம்மதியான தூக்கம் போச்சு 
குறைந்த விநியோகத்துக்கு 
செலவும் கூடுதலாச்சு 
எப்போது வரும் போகுமென்று 
கணிக்க மிக கஷ்ட மாச்சு  
ஒத்துழைத்த இன்வேர்ட்டர் 
ஒதுங்கிக் கொண்டு நாளாச்சு 

கரண்ட் இல்லா சிக்னலாலே 
போக்குவரத்து நெரிசலாச்சு 
வாகனத்தில் பயணம் செய்ய 
மனசுக்குள்ள எரிச்சலாசசு 
சாலை மறியல் தினம் 
வாடிக்கையாய் மாறிருச்சு

சிறு தொழில் கூடங்கள்  மூடியாச்சு 
பணிபுரிந்தோர் இல்லங்கள் 
வறுமையின் பிடியில் சிக்கியாச்சு  
உழைத்துப் பிழைத்தவர்கள் 
திருடிப் பிழைக்க நேர்ந்திருச்சு 
மின் மிகை மாநிலமாய் 
உருமாறும் நாளுக்காய் 
தமிழனின் ஏக்கம் கூடிருச்சு 

இல்லாமையை  புரிஞ்சுக்க 
அறிவுறுத்துகின்றது  அரசு 
ஆறு மணி நேரத்தை 
பதினான்கு மணி நேரமாய் 
மாற்றுவதா  பெரிசு?

அந்நிய முதலீட்டுக்கு  மின்வெட்டில்லை 
அதனாலே மற்றவர்க்கு கூடுதல் தொல்லை 
ஒருதாயின் பிள்ளைக்குள்  பாகுபாடா ?
பகிர்ந்தளிப்பதில் வேறுபாடா ?

பசி வந்தால் அழுதிடும் குழந்தை 
தாயிடம் பாலில்லை 
சொன்னால் நின்றிடுமோ அழுகை ?
சேயின் பசி போக்குவது தாயின் கடமை 
அழாதே எனச் சொல்வது மடமை 

முடிவெடுக்கும் திறன் பெற்ற அன்னை 
முயன்று கவனித்தால் முடியும் 
மின் மிகை மாநிலமாய் தமிழகம் உருமாறும் .








No comments:

Post a Comment