அன்பை விதைத்து அன்பைப் பெருக்கும்
அன்பே உயர் பண்பு.
ஆனந்தம் தரும் உள்ளன்பு அதனன்றி
அ௧ிலம் சிறக்காது நன்று.
இயல்பான அன்பு பண்பானால் அது
தருமே உலகில் சமாதானம்.
ஈசனாய் தெரிகிறான் அன்பால் ௭ன்றும்
மனதைத் தொட்டவர் மனங்களிலே.
உண்மை பேசி ஊருக்கு உழைத்தால்
உலகம் வசப்படும் அன்பாலே.
ஊற்று நீர் வற்றும் வற்றாதே என்றும்
அள்ளஅள்ளக் குறையா அன்பு.
எண்ணம் யாவும் அன்பு மிகுந்தால்
ஏழைக்கு இரங்குதல் எளிதாகும்.
ஏமாற்றம் இன்றி உலகம் செழிக்கும்
எதிர்பார்ப்பு அற்ற அன்பாலே.
ஐயம் வேண்டாம் அன்பிற்கு அதைப்
பெற்றவர் பெறுவர் தவிப்பு.
ஒலிக்கும் குரலில் அன்பு நிறைந்தால்
உலகம் மகிழுந்து வரவேற்கும்.
ஓயாது கடலலை ஓய்ந்தால் கடலில்லை
ஓயாத அன்பிற்கு எல்லையில்லை.
ஔவையின் அன்பே ஆத்திசூடி அறம்
சிறக்க உலவுவோம்அன்புசூடி.
No comments:
Post a Comment