மனதின் வெளிப்பாடு


Thursday, 7 November 2013

மொட்டைத் தலையும் ஆயிரம் சீப்பும்




தளர்ந்த தந்தை அழைத்தாரே 
வளர்ந்த மகன்கள் மூன்று பேரை 
வாணிபம் நமது குலத்தொழிலாம் 
அதனில் பெற்றோம்  நற்ப்பெயராம் 
இன்னும் தொழிலைச் சிறப்பாக்க
இயன்ற வழிகள் சொல்வீரே 


தலை வாரும் சீப்பு செய்தோம் 
தலைமுறையாய் வாழுகின்றோம் 
போட்டியால் சற்று நலிவுற்றோம் 
வியாபார உத்தி அறிந்திருந்தால் 
விடியும் பொழுது நமதேயாம் 
வீணாய்ப் பொழுதைக் கழித்திருந்தால் 
நலியும் நமது தொழிலேயாம் 


உங்கள் வியாபார உத்திக்கு ஒரு போட்டி 
மலை உச்சியில் இருக்கிறார் 
மொட்டைத் தலை புத்த பிச்சு 
அவரிடம் விற்கணும் 
ஆயிரம் சீப்பு 
எப்படி முடியுமென்று எண்ணாதீர்கள் 
எப்படியாவது விற்க எண்ணுங்கள் 

முதலாமவன் சென்றான் 
சீப்பு வாங்கச் சொன்னான் 
மொட்டைத் தலைக்கு 
சீப்பு எதற்கு என்றார் பிச்சு 
முதுகு சொரிய பயன்படும் என்றான் 
இரண்டு சீப்பு விற்றான் 


இரண்டாமவன் சென்றான் 
கஷ்டப்பட்டு மலையேறி 
காற்றில் முடி களைந்து 
வருகின்றன் பக்தர்கள் 
முகம் பொலிவுற 
கண்ணாடியும் சீப்பும் இங்கிருந்தால் 
பக்தர்களுக்கு நலம் பயக்கும் என்றான் 
பத்து சீப்பு விற்றான் 


மூன்றாமவன் சென்றான் 
உற்ற நண்பர்களை உடன் அழைத்தான் 
குழுவாய்க்  கூடி சிந்தித்தான் 
யோசனைகள் குவிந்தது 
புதிய யோசனை மலர்ந்தது 
புத்தர்  பொன்மொழி சீப்பில் பொறிக்கலாம் 
காணவரும் பக்தர்களுக்கு 
அவர்  அன்பளிப்பாய்க் கொடுக்கலாம் 
யோசனையை ஏற்றார் பிச்சு 
விற்றது ஆயிரம் சீப்பு 

தனியாய் சிந்த்தித்தால் புலப்படாது 
குழுவாய்ச்  சிந்த்தித்தால் கவலை நீடிக்காது





திருமணம் எதற்கு ?


உனக்கெல்லாம்  எதற்கு திருமணம் ?
மாமனார் கேட்டார் 
மாப்பிள்ளையைப் பார்த்து 

மாப்பிள்ளை 
சுட்டிக்காட்டிய
பேரக்குழந்தைகளை 
கட்டிப்பிடித்தபடி 


வரிசையும் வசதியும்


வசதியில்லாதவர்கள் 
வரிசையாய் நகர்கிறார்கள் 
வசதியுள்ளவர்கள் 
வசதியால் நுழைகிறார்கள் 
ஆலயத்தில் 
ஆண்டவன் 
அருளைப் பெறுவதற்கு


வசதியில்லாதவர்கள் 
வரிசையாய் நகர்கிறார்கள் 
வசதியுள்ளவர்கள் 
வசதியால் நுழைகிறார்கள்
பொதுவிநியோகத்தில் 
பொருளைப் பெறுவதற்கு 


வசதியானவர்களே 
அருளை எப்படியும் பெறுங்கள் 
பொருளை வரிசையாகப் பெறுங்கள் 
ஏழைகள் புண்படாமல் 
நகர்தலைத்  தொடர


கடவுள்



எங்கும் நிறைந்திருக்கும்  சக்தி
ஜீவராசிகளின்
பிராணக்கயிற்றை
பிடித்துக் கொண்டிருக்கும் சூத்ரதாரி

நிலையற்ற வாழ்வு உலகுக்கு
நிரந்தர வாழ்வு அவருக்கு
உள்ளக் குகையில் வீற்றுறுப்பவரை
அள்ளுவதும் தள்ளுவதும்
அவரவர் விருப்பம்

அனுபவம்


ஆயிரம் தத்துவங்களால் 
உணர்த்த முடியாததை 
உணர்வுப் பூர்வமாய் 
உணர்த்துகின்ற ஒன்று 

இதன் மகத்துவத்தை 
பெற்றவர்கள் 
வாழ்கிறார்கள் நன்று.

 முப்பதாண்டு  பணி  நிறைவுப் பாராட்டு 

பென்னர்  என்ற பேரைப்படி
பேரைச் சொல்லி பொருளைப் பிடி 
பென்னரோட  உயர்வைப் பற்றி பாடப் போறேண்டா
உன்னோட நினைப்பினிலே 
பென்னர் என்ற பேரைப் பதி 
வார்த்தைக்கு கட்டுப்பட்டா 
தரத்தை அடையும் வழி 
தரம் என்பது தனித்துவம்தான் 
பென்னர் அடைந்தது மகத்துவம்  தான்
                                                                   (  பென்னர்  என்ற பேரைப் படி ....)


வாரிசும் ,சர்வீஸும்  எல்லாரும் 
இங்கே வந்தா அண்ணன  தம்பி தானே 
ஒன்னாகி உழைப்பதாலே 
பலனும் அதிகம் தானே 
எங்களுக்குள் எந்தவித  பேதமில்லே 
கற்றதெல்லாம் கற்றுத்தர தயங்கவில்ல 
வாரிசு எங்க அச்சு 
அவுங்கள வச்சு 
தொழில் திறனும் கூடுது.
ஆட்டோமொபைலு  தொழிலு நன்கு வளருது 
பென்னர்  பொருட்கள் அதற்கு மிகவும் உதவுது

                                                                    (  பென்னர்  என்ற பேரைப் படி ....)

ஆண்டுகள் முப்பது ஆனதுக்கு 
அவார்டு  முன்னால்  ஏது?
வாங்கித் தந்த சங்கத்துக்கு 
வாழ்த்து என்று கூறு 
தங்கம் தர வந்திருக்கார் முரளி சாரு 
தினேஷ் சார் தலைமையிலே விழா ஜோரு
தடை பல கண்டு அதை வென்று 
இந்தப் பரிசும் வந்திருக்கு

இணைந்து வாழ்த்துவோம்  இன்முகத்தோடு 
இதயம் குளிர்ந்திடும் வாழ்த்துக்களோடு


                                                                    (  பென்னர்  என்ற பேரைப் படி ....)

(முப்பது ஆண்டு பனி நிறைவு பாராட்டு  விழாவில் -ஐந்து  ஆண்டுகளுக்கு முன்  எழுதி  பாடியது)

Sunday, 13 October 2013

ஏ. ஐ யின் அசுர வளர்ச்சி

அருகில் வந்தாய்
அணைத்துக் கொண்டாய்
அனைத்தும் தந்தாயே
சொந்த அறிவை மறக்க வைத்து
வியக்க  வைத்தாயே
உன் உறவாலே அடையும் 
துயர் போதும் போதுமே..

ஏ ஐ.. ஏ ஐ.. நீ யாரோ? 
உன் வடிவம் செய்தவர் தான் யாரோ?
உலகம் முழுதும் உன்னை சுற்றி
உன் அசுர வளர்ச்சியின் கரம் பற்றி..

 செயற்கை அறிவு  உனக்கிருக்கு
 இயற்கை அறிவு மனிதனுக்கு
 வளர்ச்சி  கிடைப்பது உன்னாலே
பலர் மயங்கி தவிப்பதும் உன்னாலே...