தளர்ந்த தந்தை அழைத்தாரே
வளர்ந்த மகன்கள் மூன்று பேரை
வாணிபம் நமது குலத்தொழிலாம்
அதனில் பெற்றோம் நற்ப்பெயராம்
இன்னும் தொழிலைச் சிறப்பாக்க
இயன்ற வழிகள் சொல்வீரே
தலை வாரும் சீப்பு செய்தோம்
தலைமுறையாய் வாழுகின்றோம்
போட்டியால் சற்று நலிவுற்றோம்
வியாபார உத்தி அறிந்திருந்தால்
விடியும் பொழுது நமதேயாம்
வீணாய்ப் பொழுதைக் கழித்திருந்தால்
நலியும் நமது தொழிலேயாம்
உங்கள் வியாபார உத்திக்கு ஒரு போட்டி
மலை உச்சியில் இருக்கிறார்
மொட்டைத் தலை புத்த பிச்சு
அவரிடம் விற்கணும்
ஆயிரம் சீப்பு
எப்படி முடியுமென்று எண்ணாதீர்கள்
எப்படியாவது விற்க எண்ணுங்கள்
முதலாமவன் சென்றான்
சீப்பு வாங்கச் சொன்னான்
மொட்டைத் தலைக்கு
சீப்பு எதற்கு என்றார் பிச்சு
முதுகு சொரிய பயன்படும் என்றான்
இரண்டு சீப்பு விற்றான்
இரண்டாமவன் சென்றான்
கஷ்டப்பட்டு மலையேறி
காற்றில் முடி களைந்து
வருகின்றன் பக்தர்கள்
முகம் பொலிவுற
கண்ணாடியும் சீப்பும் இங்கிருந்தால்
பக்தர்களுக்கு நலம் பயக்கும் என்றான்
பத்து சீப்பு விற்றான்
மூன்றாமவன் சென்றான்
உற்ற நண்பர்களை உடன் அழைத்தான்
குழுவாய்க் கூடி சிந்தித்தான்
யோசனைகள் குவிந்தது
புதிய யோசனை மலர்ந்தது
புத்தர் பொன்மொழி சீப்பில் பொறிக்கலாம்
காணவரும் பக்தர்களுக்கு
அவர் அன்பளிப்பாய்க் கொடுக்கலாம்
யோசனையை ஏற்றார் பிச்சு
விற்றது ஆயிரம் சீப்பு
தனியாய் சிந்த்தித்தால் புலப்படாது
குழுவாய்ச் சிந்த்தித்தால் கவலை நீடிக்காது
No comments:
Post a Comment