மனதின் வெளிப்பாடு


Sunday, 20 January 2013

தரமே நீ வாழ்க



ஆனந்ததத்தை  அள்ளித்தரும் உயர்தரம் - அதை 
ஆனந்தமா  ஆக்கிடுவோம் நிரந்தரம் 
சந்தையிலே போட்டிதானே  நிலவரம் 
தரம் எப்பவுமே விற்பனைக்கு துணை வரும் 

அப்போ  பொருள் செய்யும் முறை 
                                         பழமையாக இருந்திச்சு
அது போட்டியில்லா சந்தையால  ஜெயிச்சுச்சு 
தரம் இருந்த போதிலும் சற்று 
குறைஞ்ச போதிலும் 
நாம வச்சதே விலை  அன்று  மறுப்பவர் இல்லே 
தினம் பெட்டி பெட்டியா  பொருள் சேதம் ஆகுங்க
அதைப் பார்க்கும் போதெல்லாம் 
நம்ம நெஞ்சு 
வலிக்குங்க .....

அந்தக் கால முறைகள் எல்லாம் 
ரொம்ப ரொம்ப மாறிடிச்சு
சிஸ்டம் பலவும் கற்கச் சொல்லுது இப்பத் தொழிலு 
தரமுன்னு  சொல்லுறாங்க  சான்று பல கேக்குறாங்க
ஒண்ணு  இருந்து  ஒண்ணு  குறைஞ்சா  விட்டுப் போறாங்க 
தொழிலு  எல்லாமே  ஒரு கண்ணாமூச்சி - அதில் 
தரம் இல்லாத பொருள் காணாப் போச்சு 
விற்பனைகள் உலகமெங்கும் பரவியாச்சு 
தொழிலில் நானுதான் எனச்  சொல்ல ஆளில்லே 
ஒருத்தன் வீழுறான்  பலர் உள்ளே நுழையுறான் 
என்னடா தொழிலு  இதில் எத்தனை புதிரு 
தரம் இருந்தால் லாபம் அதை  இழந்தவன் 
பாவம் 


நம்மளோட 
தொழிலு  எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சு 
 ISO ங்கிறோம் 5s ங்கிறோம் TPM ங்கிறோம்   
எல்லாம் இருந்து இன்னும் முன்னேற வழி  என்னான்னு 
ரொம்ப நாமளும் தேடி பார்க்கிறோம்
பொருள் தரத்தை உயர்த்திட நாம  சலிப்பதே இல்லை 
இழப்பை குறைத்திடும் முறை இருக்குது உள்ளே 
நம்மளுக்கு போட்டி கண்டு பயமே இல்லே 

பொருளை செய்யிறோம்
அதை   விலைக்கு விக்கிறோம் 
அதன் செலவு குறைக்கத்தான்
ரொம்ப முயற்சி பண்ணுகிறோம்

பொருளின் தரத்தையே 
உயிரா மதிக்கிறோம் 
அதன்  உயர்வை எண்ணித்தான்
 நாளும் உழைக்கிறோம்.


Tuesday, 30 October 2012


    

இஸ்லாமிய  வருடப்பிறப்பு 

ஹிஜ்ரி 1434 (16.11.2012)


 

வாழ்த்துரை

      
நிறைவுடைய வாழ்வளித்து
நெடுநிலங்  காப்பதற்கு
மறையளித்த இறைவனுக்கே
மாபெரிய  புகழனைத்தும்
 
இறைவிரும்பும்  மறைவழியில்
இகத்தோரை அழைத்ததற்காய் 
குறைஷியர்கள் கொதித்தெழுந்து
கொன்றுவிட   எத்தனிக்க

நிறைமதியாம்  மாநபிதம்
நண்பர்அபூ  பக்கருடன்
மறைவாக மக்கா விட்டு
மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த

திரையகன்ற திருநாளே
தீனோர்க்குப்  புத்தாண்டாம்
இறைதூதர் முஹம்மது  (ஸல் )
இயம்பிட்ட ஹிஜ்ரி ஆண்டு

குறைபோக்கி  நலவளமும்
குன்றாது நமக்களிக்க
இறையோனை இறைஞ்சிஎன் 
இன்வாழ்த்தை  இயம்புகின்றேன்




முகவை. முகம்மது ஆதம்
பன்னூல் ஆசிரியர்  
செல் :   7708179412
தென் ரயில்வே  மதுரை கோட்ட  
 புகைவண்டி கட்டுப்பாட்டு அதிகாரி  (ஒய்வு)









Monday, 22 October 2012

தியாகத் திருநாள் வாழ்த்து




இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான்.

இறைவனுடைய படைப்பிலேயே  சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால் படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.

நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.

நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை,  இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.

செல்வம், அகம்பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவக் கூடுகளை  சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்

.இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்

இவ்வு லகை படைத்து பரிபாலிப்பவனே
அளவற்ற அருள் பொழிபவனே
 நிகரற்ற அன்புடையோனே
தீர்ப்பு நாளின் அதிபதியே
உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக.

அன்பு, பாசம், பரிசு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்!

நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை, இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமன்றி இனிவரும் நாட்களிலும் எல்லாருக்கும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம்.
எல்லாம் வல்ல இறைவனே.. உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!
நன்றியும், கரு ணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக்கச் செய்வாயாக .

எம்.ஏ.ஆர்.அப்துல்லா  நிர்வாகி, பெரியமேடு பள்ளிவாசல்

Sunday, 21 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து





தள்ளாத வயதினிலே 
தான் பெற்ற ஒரே மகனாம் 
இளைஞரான இஸ்மாயீலை
இறைவனுக்காய்  பலி கொடுக்க 
இம்மியேனும் மனம் கலங்கா 
துணிந்திட்ட இப்ராஹீமின் 
உள்ளத்தில் உறைந்திருந்த 
உன்னத உறுதியினை  
வல்ல நாயன் மனமுவந்து 
வானிருந்து ஆடு இறக்கி 
நல்லதல்லா நர பலியை 
நானிலத்தில் ஒழித்திட்ட 
நன்னாளாம் தியாகத்திருநாள் 
நயம் பயக்க அனைவருக்கும் 
வல்லோனை இறைஞ்சி என் 
வாழ்த்தினையும் கூறுகிறேன் 

 












குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37
 


எழுதியவர்  -    முகவை . முகமது  ஆதம் 

                                                   cell :   7708179412




 

Friday, 19 October 2012

தொலைந்த கரண்டை மீட்டுத் தாருங்கள்




நிம்மதியான தூக்கம் போச்சு 
குறைந்த விநியோகத்துக்கு 
செலவும் கூடுதலாச்சு 
எப்போது வரும் போகுமென்று 
கணிக்க மிக கஷ்ட மாச்சு  
ஒத்துழைத்த இன்வேர்ட்டர் 
ஒதுங்கிக் கொண்டு நாளாச்சு 

கரண்ட் இல்லா சிக்னலாலே 
போக்குவரத்து நெரிசலாச்சு 
வாகனத்தில் பயணம் செய்ய 
மனசுக்குள்ள எரிச்சலாசசு 
சாலை மறியல் தினம் 
வாடிக்கையாய் மாறிருச்சு

சிறு தொழில் கூடங்கள்  மூடியாச்சு 
பணிபுரிந்தோர் இல்லங்கள் 
வறுமையின் பிடியில் சிக்கியாச்சு  
உழைத்துப் பிழைத்தவர்கள் 
திருடிப் பிழைக்க நேர்ந்திருச்சு 
மின் மிகை மாநிலமாய் 
உருமாறும் நாளுக்காய் 
தமிழனின் ஏக்கம் கூடிருச்சு 

இல்லாமையை  புரிஞ்சுக்க 
அறிவுறுத்துகின்றது  அரசு 
ஆறு மணி நேரத்தை 
பதினான்கு மணி நேரமாய் 
மாற்றுவதா  பெரிசு?

அந்நிய முதலீட்டுக்கு  மின்வெட்டில்லை 
அதனாலே மற்றவர்க்கு கூடுதல் தொல்லை 
ஒருதாயின் பிள்ளைக்குள்  பாகுபாடா ?
பகிர்ந்தளிப்பதில் வேறுபாடா ?

பசி வந்தால் அழுதிடும் குழந்தை 
தாயிடம் பாலில்லை 
சொன்னால் நின்றிடுமோ அழுகை ?
சேயின் பசி போக்குவது தாயின் கடமை 
அழாதே எனச் சொல்வது மடமை 

முடிவெடுக்கும் திறன் பெற்ற அன்னை 
முயன்று கவனித்தால் முடியும் 
மின் மிகை மாநிலமாய் தமிழகம் உருமாறும் .