மனதின் வெளிப்பாடு


Monday, 18 June 2012

தரம் காக்கும் தரக்குழு


மையத்திலிருந்து  ஓரம்
தொடுகின்ற தூரமே ஆரம்
ஆரம்  சீரானால் உருவாகுமே வட்டம்
தரத்தைச் சீராக்குமே தரவட்டம்

இழப்பை அடையாளம் காண்பதும்
அது எதனால் என்று
ஆராய்ந்து  பார்ப்பதும்
சரியான் தீர்வை ஆமோதிப்பதும்
நடைமுறைப்படுத்துவதும்  பணிகளாகும்.

குழுவின் குறிக்கோள் இதுவாகும்
தரக் குழுவின் சாதனை பலவாகும்

தனிமரம்  தோப்பாகாது  உண்மை
குழுவாய் இணைந்தால்  நன்மை
தரம் என்ற இலக்கினை எட்ட
ஆறு முதல் பத்து பேர் இணைந்து
அவரவர் துறையிலே திறம்பட
செயல்பட உருவானதே தரவட்டம்
1960 ல்  ஜப்பானில்  உருவானது
முதல் தர வட்டம்

தரமான பொருள் மலிவான விலை
தங்கு தடையில்லா விநியோகம்
தொடருகின்ற தொழில் வெற்றியாக்கிடும்
தாரக மந்திரம் இதுவாகும்
தரமே தொழிலின் ஆதாரமாகும்

உயிரை வச்சு உடலு
தரத்தை வச்சு பொருளு
உயிரும் தரமும்  ஒண்ணு
உணர்ந்தால் தொழிலில் விண்ணு

டிபெக்டை  சாட் போட்டு  சார்ட் பண்ணு
அதை போக்குற வழியை ஸ்டார்ட் பண்ணு
 குவாலிட்டி  கன்ட்ரோல்  டூல்ஸ் ஏழு
குவாலிட்டிக்கு  அது தான் வெற்றி வேலு

கையில் எடுத்தா பதறுது டிபெக்ட்
குறி  வச்சா இருக்குது எப்பக்ட்
செக் சீட்டும் டால்லி சீட்டும் ஒண்ணு
செவென் டூல்ஸ்ல இதுவும் ஒண்ணு

அரிஸ்டாட்டில் சொன்னது தத்துவம்
ஹிஸ்டோகிராம்  போட்டா மகத்துவம்
பரட்டோ  அனலிசிஸ் ஜோரு
தருமே வெர்டிக்கல் பாரு
டிபெக்ட்  வெர்டிக்கல் எல்லாம் சாயணும்
தரையோட தரையா ஆகணும்

இருக்குது காஸ் அண்ட் எபக்ட்

 பளிச்சுன்னு தெரியுது டிபெக்ட்
காஸ்  எல்லாம் காசாக மாறனும்
குவாலிட்டி பெர்பெக்டா ஆகணும்

மேன் , மிசின், மெதட்,
மெட்டீரியல்  எல்லாம் புரியுது
டிபெக்ட் போக்குற வழியும் பிறக்குது

புள்ளி வச்சு போடுவது  ஸ்கேட்டர்
டேட்டா காரலேட் பண்ணுவதும்  ஸ்கேட்டர்
டிபெக்ட் காணாம ஆக்குவதுதான் மேட்டர் 

டேட்டா  தனித்தனியா பிரிச்சா ஸ்ட்ரேடிபிக்கேசன்
 டிபெக்ட் பார்த்ததும் தோணுமே நமக்கு எமோசன்
உருவாகுமே  நல்ல சொல்யூசன்
குவாலிட்டி  ஆகுமே ப்ரொமோசன்  

எக்ஸ் அண்ட் ஆர்  சார்ட் பாரு
கன்ட்ரோல்  சார்ட்டுன்னு  கூறு
கன்ட்ரோல்   பண்ணிப் பாரு
குவாலிட்டி குழுவில சேறு
ஐ ஏ  எஸ்  ஆகணும் அதுக்கு
ஐடன்டிபை   அனலைஸ்  சால்வ்
தெரிஞ்சா   ஐ ஏ  எஸ்  பாஸ்
தொழிலுக்கு ஆகலாம் பாஸ்
 குவாலிட்டி ஆயிடும் பெஸ்ட்
உற்பத்தி திறனோ சூப்பர் பாஸ்ட் !

பதறாத காரியம் சிதறாது




















பதறாத காரியம் சிதறாது
எல்லோருக்கும்  தெரியும்
பதறாமல் இருப்பதற்கு
பக்குவப்பட்டால்தான்  முடியும்.

பாமரரும்  படித்தவரும்
பாகுபாடு ஏதுமின்றி
அவரவர் சூழ்நிலையால்
பதறித்தான் வாழ்கின்றார் .

உதறித்தான் தள்ளிடவே
உறுதியாக நினைத்தாலும்

கணப்பொழுதில்  நிலைமாறும்
உணர்ச்சிதானே பதற்றமாகும்.

பதறியதால் சிதைவதுதான் வரலாறு
பதறியதால் சிறந்தவர்கள் யார் கூறு ?

விளையாடச் சென்ற பிள்ளை
வீதியிலே விழுந்து விட்டான்
பதறியே ஓடினாள்  அந்தத் தாய்
சென்றதில் தவறில்லை
பதறி ஓடியதில்
கால் இடறி விழுந்த்திருந்தால் 
பதற்றம் பாதிப்பை இரட்டிப்பாக்கும்


மாட்டுக்கு கொம்பில் பலம்
கழுதைக்கு காலில் பலம்
மனிதனுக்கு அறிவுதான் பலம்
பதற்றம் அறிவினை மழுங்கச் செய்யும் .

ஆத்திரத்தால்,  அவசரத்தால்
எதிர்பார்ப்பால், ஏமாற்ற்த்தால்
எழுகின்ற பதற்றங்கள்
தினம் தினம் வேதனைதான் .

உன்னிலடங்கா மனந்தனைக்  கொண்டு
எண்ணிலடங்கா  சாதனைகள் எவ்வாறு ? 
பதற்றம் தணிந்து பக்குவப்படுவோம்
வாழ்வு  சிறக்க வாழ்ந்து காட்டுவோம்  !

  (சீரான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தும் சிறந்த உளப்பயிற்சியின் மூலம் பதற்றத்தைத்  தவிர்த்தும்  எழுத்து,காம்  நண்பர்கள் அனைவரும் சிறந்த முன்மாதிரியாய்  திகழுவோம் )

  

Saturday, 16 June 2012

சம்பள தேதி

 சம்பள  தேதி

உழைப்புக்கு முக்கிய தேதி
மாதத்து கடனை போக்கி
மானஸ்தன்  ஆக்கும் தேதி

மாட்டுப் பாலுக்கும்
மளிகை சரக்குக்கும்
வீட்டு வாடகைக்கும்
கரண்டு பில்லுக்கும்
ஸ்கூல்  பீசுக்கும்
பஸ்  பாசுக்கும்

பணத்தை பிரித்து விட்டு
கணக்கை பார்த்து விட்டால்
துண்டு விழும் பட்ஜெட்டே
துவண்டு விடும் மனமே தான்

 இதர தேவை என்ற
பட்ஜெட்டின்
மறு பரிசீலனையில்
பல தீர்மானங்கள்
ஒத்தி வைக்கபபடுவதாலே
மாதங்கள் நகர்கிறது
மாற்றம் ஒன்றும் இதிலில்லை!

(விலைவாசி  ஏற்றத்தால்  பாதிக்கப்படுகின்ற  மாதச் சம்பளக்காரர்களின்
ஒட்டு மொத்த நிலை இதுவாகத்தானே  இருக்கும் )

 

வளையத்தை வெட்டி விடு

வளையத்தை   வெட்டி விடு
சிககலெல்லாம்  தீர்ந்து விடும்
சொன்னார்கள் தோழர்கள்
  
புரியாமல நானும்தான்
வளையத்தை   வெட்டிவிட்டால்
வளையம்   சிதைந்தல்லவா
போய் விடும் என்றேன்

சிதைந்த  வளையமே  
சிக்கலுக்கு மருந்து என்றார்கள்
புரியாமல் நான் விழிக்க
புரிய வைத்தார் தோழர்தான்

தன பலத்து உழைப்பாலே
தான் பெற்ற சம்பளத்தை
முன் பெற்ற கடனுக்காய்
வட்டிக் கடன் கொடுத்தவர்கள் 
வளைத்து நின்றார்
வளையம்  போலே
 
தோழர் சொன்னார்
இறைவா !   இந்த
வளையத்தை  வெட்டிவிடு 
என் சிக்கலெல்லாம்  தீர்ந்து விடும்

தொன்று தொட்ட சொற்றொடர்தான்
என்றாலும்  தொழிலாளர்
ஒட்டு மொத்த நிலையிதுதான்

நிலை மாறும் நாள் வரவே
தன நிலை மறந்து கடனைத்தான்
 வாங்காதீர் எந்நாளும்
சிக்காதீர் வளையத்தில்  

Tuesday, 5 June 2012

ஜாலி மூடு


ஜாலி .. ஜாலி .. ஜாலி
லைப்பே  என்றும் ஜாலி
ஜாலிக்கு போடதே வேலி
அப்புறம் லைப்பே காலி

ஜாலி இல்லாத வாழ்வா இல்வாழ்வு
தொடரும் துன்பம் பல நூறு
உனக்குள் இருக்கும் ஜாலி மூடு
உன்னை உயர்த்தும்  சிறப்போடு

ஜீரணிக்கத்  திறனிருந்தால் உண்ணு
சீரழிக்கும் என நினைத்தால் தள்ளு
மனதினிலே நல்லதையே  எண்ணு
நாலு பேரு மனம் குளிரப் பண்ணு

சுட்ட அப்பளம் நொறுங்கும்
பட்ட மனசு கலங்கும்
யோசிச்சா உண்மை விளங்கும் - ஜாலியை
நேசிச்சா கவலை விலகும்

ஊரோட கூடி வாழ நினைக்கணும்
உனக்குள்ளே லட்சியத்தை  விதைக்கணும்
லட்சியப் பயணத்தை  தொடரணும்
சிகரத்தின் உச்சியை   நீ எட்டணும்.




பொய் முகங்கள்



சிங்கம், புலி, கரடி
காட்டுக்குள்ள  இருக்கு
சீறும்  அதன் நினைப்பு
நாட்டுக்குள்ள எதுக்கு?
வாழும் மனிதருக்கு
அந்தக்குணம்  இருக்கு
மூடி மறச்சிருக்கு
முகத்தோட சிரிப்பு

வெளிச்சம் தரும் நிலவு
விண்ணுல தான் இருக்கு
அது தேஞ்சு மறையுறது
இயற்கையின் பொறுப்பு

இயற்கையின் மாற்றம் அறிந்திடலாம்
அதன் சீற்றம் உணர்ந்து வாழ்ந்திடலாம்
மனதின் மாற்றம் புரியாது - அது
எப்போ வெடிக்கும் தெரியாது

மனத்தைக் காட்டும் கண்ணாடி
முகமென்று சொல்வது அக்காலம்
முகத்துக்கு மேலே  முகமூடி
நிஜத்தை மறைக்கிறோம் அதை சூடி.



Monday, 4 June 2012

வேண்டாமடி உயிர் உனக்கு



சிற்பி சொன்னான்
சிலையைப்  பார்த்து
என் கலையிற் பிறந்த சிலையே
அடைந்தாய்  சிறந்த உருவே ....

இந்தச் சின்ன உளி
என் விரல் கொண்டு
உன் மீது

களி நடம்  புரிந்ததாலே
கல்லாய் இருந்த  நீயும்
பெண்ணாய் மாறி விட்டாய்
கண் கவர் அழகைப் பெற்றாய்

கடவுளும் படைக்கிறார்
நானும் படைக்கிறேன்
உனக்கு உயிரூட்டும்
சக்தி மட்டும் எனக்கில்லை
வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு
நீ உயிர் பெற்றால்
தனித்திருக்கும் உனக்கு
துணை  தேட வேண்டும்
 துணைவர்கள் தூயவர்களா
கண்டறியும் சக்தி எனக்கில்லை

இந்த மண்ணில் உள்ளோர்
புறத்தைக்  காட்டி
அகத்தை மறைக்கும்
அற்புதக் கலையில் வல்லவர்கள்
சிற்பக் கலை பயின்ற எனக்கு
அந்த மர்மக் கலை 
ஏனோ புரியவில்லை
அதனால் நீ ஊனமாவதை
விரும்பவில்லை...

பொன் தருவார் என்பதாலே
புண் பட்ட அவளைக் கூட
பெண் கேட்டுச் செல்கின்றார்
மாடிப்படியேறி...
பண பட்டு நின்றிருந்தும்
பல பெண்கள் 
பெண் கேட்க வழியில்லாமல் ....

வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு

பொது வாழ்வில் நேர்மைக்கோ
பஞ்சமாகிப் போனதனால்
போய் விட்டார் மகாத்மாக்கள்
பொது வாழ்வைத் துறந்து விட்டு

பூவுக்கும்  பொட்டுக்கும்
ஆசைப் பட்டு
பெற்றோர் போட்ட
நகைகளை கணவனுக்கு
கேட்ட போதெல்லாம்  தந்து விட்டு
கையில் குழந்தையுடன்
கசிகின்ற  கண்ணீருடன்  
பல பெண்கள்
அதனால்
வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு


சிலை அழுதது கண்ணீர் விட்டு
தன்னருகே நடந்து சென்ற
பெண்ணைப் பார்த்து
பெண்ணின் அவலங்களை நினைத்தா?
இல்லை
தனக்கு உயிரில்லையே என்று..