இன்றைய பிறந்த தினம்
இன்னும் சிறந்த தினம்
பெற்றோருக்கு பிள்ளையாய்
பிறந்த தினம்
இன்று இல்வாழ்க்கை
தொடங்கிய பின் கொண்டாடும்
முதல் பிறந்த தினம்
அன்னை, தந்தையோடு
அன்பு மனைவியையும்
இணைத்துக்கொண்டு
கொண்டாடும் தினம்
உறவுகளின் நெருக்கத்தால்
உற்சாகம் ஊட்டுகின்ற தினம்
நீடித்த வாழ்வு, நிறைந்த ஆரோக்கியம்
மனம் நிறைந்த மகிழ்ச்சி
எப்போதும் புத்துணர்ச்சி
இல் வாழ்வின் இனிமை,
பணியின் மேன்மை
நிரம்பப் பெற்று,நிறைவோடு வாழ
எல்லாம் வல்ல இறைவனை
இறைஞ்சி வாழ்த்துகிறேன்..
No comments:
Post a Comment