கவலை கொள்ளாதீர்கள்
சராசரி பெண்ணல்ல நீங்கள்
சாதனைப் பெண்களின் வரிசையில் நீங்களும் ஒரு அங்கம்
உங்களுக்கான பணியில்
நீங்கள் பதித்த முத்திரைகளை
நாங்கள் அறிவோம்
கல்லூரி முதல்வராய்
நீங்கள் ஆற்றிய பணிகளும்
சந்தித்த அனுபவங்களும் ஏராளம்..
புன்னகை ததும்பும் முகத்தோடு
உறவுகளை பேணிக் காப்பது
உங்களின் இயல்பான குணம்
பெற்ற தாயை
இறுதிவரை காத்தீர்கள்
அவர்களின் வயது நூறு
உங்களுக்கும் கிட்டும் ஆயிசு நூறு
பிள்ளைகளின் உயர்கல்விக்கும்
உயர்ந்த நிலைக்கும்
பெற்றோர்களாகிய
நீங்களே அடித்தளம்...
உங்களோடு பழகிய
ஆண்டுகள் சிறிது
பதிந்த நினைவுகள்
மிகப் பெரிது
உங்கள் வருகைக்காக
காத்திருப்பது
எங்கள் இயல்பாகி விட்டது
பிள்ளைகளின்
அன்பான அரவணைப்பில்
மகிழ்வோடு நீங்கள்
மகிழ்வான தருணங்களால்
உங்கள் மனம் நிரம்பட்டும்..
சின்னச் சின்ன தடைகள்
வாழ்க்கையில் அவ்வப்போது
எல்லோருக்கும் சகஜம்தான்
இதையும் கடப்பீர்கள்
இன்னும் ஜொலிப்பீர்கள் ...
பிறருக்காக துடிக்கும்
உங்கள் இதயத்தைச் சீராக்க
உங்களுக்குள்
சின்னதாய் ஒரு கருவி
வசதியானவர்களின்
மருத்துவத்திற்கான
முதல் தேர்வு அமெரிக்கா
இறைவன் அருளால்
இயல்பாய் கிட்டியது உங்களுக்கு
உயர் மருத்துவத்திற்கான வாய்ப்பு
எல்லாம் வல்ல இறைவன்
அல்லாஹ்வுக்கு நன்றி
நீங்கள் நலம் பெற்றமைக்கும்
இன்னும் நலமாய் வாழ்வதற்கும்...
No comments:
Post a Comment