ஓய்வே... எனக்கு எதற்கு?
கண்ணீரில்... கரையாதே
சமூகப் பணிகள் நிறைய இருக்கு
உனக்காகவே காத்திருக்கு....
பணிகள் முடித்து வந்த துறைகள்
அதில் சிறப்பை கூட்டும் உன் பணிகள்
என்றென்றும் உன் பேரைச் சொல்லும்
எண்ணத்தில் என்றென்றும் தங்கும்
உயர்வாகவே நாம் வாழுவோம்...
வயது ஆட்கொண்டது
ஓய்வை பணி தந்தது
பிணியை யார் தந்தது?
அதன் வரவை யார் வெல்வது?
வயதானால் தோற்றத்தில் மாற்றம்
உள்ளத்தில் கூடாது வாட்டம்
உயர்வாகவே நாம் வாழுவோம்
நட்பு சிறக்கின்றது
நன்மை கிடைக்கின்றது
வாரிசு விரும்பாதது- நாம்
வழிகாட்ட முன் நிற்பது
நாம் பெற்ற பிள்ளைகள் இன்று
வாழட்டும் அதன் போக்கில் நன்று
உயர்வாகவே நாம் வாழுவோம்
No comments:
Post a Comment