இனிய தரம் செய்து பாருங்கள்
பொருள் விற்பனையில் தேங்குவதில்லை
பெருமையுடன் நிமிர்ந்து நில்லுங்கள்
தரம் படைப்பவர்கள் வீழ்வது இல்லை
( இனிய தரம்....)
அள்ள அள்ள குறையாத ஆற்றல் பெற்றது
ஈடு இணை இல்லாத சிறப்பை பெற்றது
செய்யும் தொழில் சிறக்க வழி வகுக்கின்றது
உலகம் எங்கும் பரவியது ஜொலிக்கின்றது
( இனிய தரம்....)
ஆர்வமுடன் உழைப்பவருக்கு அள்ளித் தருகுது
அல்லல் துன்பம் துயரங்களை தள்ளி நிறுத்துது
பெயரைச் சொல்லி பொருளை கேட்கும் பெருமை படைக்குது
அந்த பெருமையோடு உலகைச் சுற்றி உயர்ந்து நிற்குது
இழப்பு கண்டு மாந்தர்களே தளராதீர்கள்
தரத்தை கூட்டும் யுக்திகளை கையில் எடுங்கள்
அதன் இடத்தில் குறை அனைத்தும் சுட்டிக்காட்டுங்கள்
தரம் சிறந்து தொழிலினிலே வெற்றி பெறுங்கள்
( இனிய தரம்....)
புத்தாக்கம் என்பதெல்லாம் புதுமை செய்வது
செய்யச் செய்ய தொழிலும் மிக விருத்தி ஆகுது
யோசனைகள் அனைவருக்கும் பொதுவானது
நல் யோசனைகள் குவிவது தான் சிறப்பாகுது
பிழைகளற்ற செயல்கள் என்று ஏதுமில்லை
பிழைகள் எல்லாம் தொடர்வது தான் பெரிய தொல்லை
அதை தவிர்க்கும் வழிமுறைதான் தரத்தின் எல்லை
இதை உணர்ந்தால் வெற்றி என்றும் குறைவதில்லை
( இனிய தரம்....)
No comments:
Post a Comment