மனதின் வெளிப்பாடு


Friday 3 September 2021

ACMA - வாழ்த்து கவிதை

ACMA( Automotive Components Manufacturers Association)
6th QC Competition at Bangalore on 16/07/2011 - Hotel Atria)
 16/07/2011 அன்று எழுதியது

                வாழ்த்து கவிதை 

உயர்வைக் கூட்டும் அக்மா

எல்லையில்லா அன்புக்கு அம்மா 
தொல்லையில்லா தொழிலுக்கு அக்மா 
அஃ என்பது தமிழ் மொழியின் ஆயுத எழுத்து
அஃமா என்பது ஆட்டோமோட்டிவ் காம்போனென்ட்ஸ்
 உற்பத்தியாளர்களின் ஆனந்த  எழுத்து
பல நிறுவனங்களை தன்னகத்தே இணைத்துள்ள 
அக்மா ஒரு சிறந்த அமைப்பு
அக்மாவோடு இணைந்து செயல்படுவதால் 
தொழிலில் வளர்ச்சியின் பிரதிபலிப்பு.

600 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இணைப்பு அக்மா
வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் அக்மா
மேம்பட்ட தரத்தை ஊக்குவிக்கும் அக்மா
புதிய தொழில்நுட்பத்துக்கு மெருகூட்டும் அக்மா
உலகளாவிய வர்த்தகத்தின் உறுதுணைவன் அக்மா
சேகரிக்கும் செயல்திறனால் மணம்பரப்பும் அக்மா 
பல பூக்கள் இணைந்த பூமாலை போன்றது அக்மா
பாமாலை பலதொடுக்கும் கீர்த்தி பெற்றது அக்மா
இணைந்த நிறுவங்கள் பெற்றிருக்கும் சான்றுகளால் 
வளர்ந்த இந்தியா நமதென்று மார்தட்டும் அக்மா.

ISO 9001, ISO 14001,OHSAS, TPM, DEMING
இதுமட்டுமா ? 
Japan Quality medal,
Singo Silver Medalliyan,
Jipm Excellence Award
போன்ற பல விருதுகளை பெற்றிருக்கும் 
நிறுவனங்கள் இதனுள் இணைப்பு
அக்மாவின் சீரிய செயல்பாட்டால் 
நீங்கிடாது அதன் பிணைப்பு.

சிறந்த தலைமை வளர்ச்சியின் அங்கம் 
அஃமாவின் தலைமை தற்போது
ஐயா , ஸ்ரீ வத்ஸராமின் சொந்தம்
ஆட்டோமோட்டிவ் பொருட்களின் 
உற்பத்தியோ வசந்தம்.
தென் பிராந்தியத்தின் தலைவர் 
ஐயா,ஹரிஷ் லட்சுமணன் 
ராமும், லட்சுமணனும் இணைந்து செயல்பட்டது
இதிகாசத்தில் மட்டுமல்ல
இன்றும் நடக்கிறது அஃமாவில்
வளர்ச்சி சிறக்கிறது செயல்திறனில்.

 
தொடரட்டும் அஃமாவின் பணி
மலரட்டும் புதுயுகத்தின் பாணி
தடையில்லா வர்த்தகத்தில் போட்டியை தவிர்த்து
தலை நிமிர்ந்து நிற்கட்டும் நம் இந்தியா 
என்றென்றும் இனி. 

சிறந்த அரவணைப்பு
சீரிய உபசரிப்பு
அஃமாவின் தனிச்சிறப்பு.

No comments:

Post a Comment