மனதின் வெளிப்பாடு


Thursday, 28 November 2019

இலக்கை நோக்கி


இலக்கை நோக்கிய பயணம்
வாழ்வை வசந்தமாக்கும் பயணம்

இலக்கு இல்லாத பயணம்
துடுப்பு இல்லாத படகு போன்றது

இலக்கை தீர்மானித்து
உழைப்பை  சீர்படுத்து

இலக்கு என்பது உந்துசக்தி
திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு

ஜே கே பென்னரின்
நமக்கான பங்களிப்பின்
சென்ற ஆண்டுகளின்
இலக்கை எட்டினோம்
மகிழ்கிறோம்.. பூரிக்கிறோம்.

இந்த ஆண்டின் இலக்கு
............ கோடி
கூட்டு முயற்சியின்
கூடுதல் பலம் மட்டுமல்ல
இன்னும் சக்தி தரும்
புதிய யுக்திகளும் தேவை.

இழப்பை தவிர்த்து
தரத்தை கூட்டி
செலவை குறைத்து
லாபம் பெருக்கி
நிறுவனத்தை வளர்த்து
நாமும் வளர
சிந்திப்பது அனைவரின் கடமை

என் சிந்தனையின் முன்னணியில்
சிறகடித்து பறப்பது அவுட்சோர்சிங்.

அளவான குடும்பம்
வளமான வாழ்வு
குடும்பத்தின் மேன்மைக்கு

அளவான ஊழியர்கள்
அதிகரிக்கும் அவுட்சோர்சிங்
தொழிலின் மேன்மைக்கு

திறனில் மேம்பட்ட
பலரின் துணையுடனே
தொழிலை சிறப்பாக்கும்
முறைதானே அவுட்சோர்சிங்

நிறுவன வளர்ச்சியிலே
அன்றாட முறைதனிலே
பொதுத்துறை, தனியார்துறை
அனைவரும் விரும்புகின்ற
முறைதானே அவுட்சோர்சிங்

பணியை பகிர்ந்தளித்து
உற்பத்தியை எளிதாக்கி
வாடிக்கையாளரை வசப்படுத்தும்
முறைதானே அவுட்சோர்சிங்

நம் பணியை நமக்காக
நாம் விரும்பும் வகைதனிலே
முன்னேற்றப் பின்னணியில்
உருவாக்கி சமர்ப்பிக்கும்
முறைதானே அவுட்சோர்சிங்

சிந்தனையின் நாட்டமெல்லாம்
தரத்தை மேம்படுத்த
புதியன படைக்க என
எண்ணத்தை எளிதாக்கி
செயலை சிறப்பிக்கும்
முறைதானே அவுட்சோர்சிங

பணி செய்யும் இடமெல்லாம்
பொருட்களை குவித்து வைத்து
5 S ஐ பாழ்ப்படுத்தும்
நிலையைப் போக்குகின்ற
முறைதானே அவுட்சோர்சிங்

கண்காணிப்பை பலப்படுத்தி
அவுட்சோர்சிங் உறவுகளை அதிகப்படுத்தி
அவர்தம் திறமைதனை வசப்படுத்தி
உற்பத்தியை சிறப்பாக்கி
இலக்கை எளிதாய் எட்டலாம்
உயர்வாய் உலகை வலம் வரலாம்.

பணி நிறைவு வாழ்த்து


பணி நிறைவு வாழ்த்து

.அன்பால், பண்பால், அறத்தால்  உயர்ந்தவரே
இனிய நண்பரே, இன்னுயிர் தோழரே
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கம் கண்டெடுத்த முத்தே
தொழிற்சங்கத்தின் முன்னாள் முதல்வரே
எங்களின் வழிகாட்டியே ...

பலருக்கு மரத்தடி மரியாதை
செய்வித்த உமக்கு - இன்று
மரத்தடி மரியாதை செய்வதில்
எங்களுக்கு மரியாதை
மகிழ்கிறோம் .. பூரிக்கிறோம் 

தலைமைப் பதவி தானாய் வருவதில்லை
உழைப்போர்களின் அங்கீகாரம்
செயல்திறனின் பிரதிபலிப்பு
உழைப்பின் வெகுமதி 

முன்னாள் தொழிற்சங்க தலைவர்களோடு
இணைந்து செயல்பட்டு அனுபவம் பெற்றீர்
அளப்பரிய அனுபவத்தை  ஆதாரமாக்கி
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கத்தை
தலைமையேற்று வழிநடத்தினீர்
தொழிலாளர் நலம்வாழ வழிகாட்டினீர் 

ஊதிய உயர்வு ஒப்பந்தம்
இருமுறை நிகழ்ந்தது உம் தலைமையில்
ஜே. கே  பென்னர் உற்பத்தி பிரிவு
மதுரையில் நீடித்து நிலைப்பதற்கு
இக்கட்டான தருணங்களில்
தொழிற்சங்கத்தின் அரவணைப்பை தந்தீர்
தொழிலாளர்களின் அரணாக நின்றீர் .

மனதில் சரியெனப்பட்டதை
உணர்ந்து செயல்பட்டீர் .
தொழிலாளர் நிர்வாத்திடையே
சிறந்த பாலமாக திகழ்ந்தீர் .
உமது அன்பால் மகிழ்ந்திருக்கிறோம்
உதவும் பண்பால் வியந்திருக்கிறோம்

நட்பை நேசிக்கும் நல்லவரே
தொண்டுள்ளம் கொண்ட பண்பாளரே
தலைக்கணம்  சிறுதும் உமக்கு இல்லை
அதனால் விரிகிறது நட்பு எல்லை
உமது நட்பு வட்டம் பெரிது.

இன்று உமக்கு பணி ஓய்வு
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
ஓய்வு எடுக்க அல்ல பணி ஓய்வு
மாறுபட்ட சாதனைக்கான
ஒரு நிகழ்வே பணி ஓய்வு
உடல் திறன் உள்ளவரை
உள்ள உறுதியோடு தொண்டாற்றி சிறக்க
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம் 

அன்னை மீனாட்சியின் அருளோடு
அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு
அளவில்லா நட்புகள் துணையோடு
வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம்

இயற்கை வளம்

இயற்கை வளம் இயற்கை வளம் காக்கணும்
இயன்றவரை செயல்படுத்த உழைக்கணும்
மனுசனோட வாழ்வாதாரம் உயரணும்
இயற்கை மகத்துவத்தை மனம் உணர்ந்து மதிக்கணும்

மனுசனுக்கு தேவை இருக்கு ஆயிரம்
இயற்கை அழிவதற்கு எடுக்கலாமா ஆயுதம்
சமூக மாற்றம் வாழ்வில் மிக அவசியம்
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வாழ்வுக்கு பாதகம்.

திறந்தவெளியில் தினம்தோறும் நடக்கணும்
திறந்தவெளியில் மலம் கழிக்க மறுக்கணும்
சுகாதாரம் சுத்தம் பேண உழைக்கணும்
தூய்மையான இந்தியாவை  படைக்கணும்.

உற்பத்தி கலாச்சாரம்



எத்தனையோ கலாச்சாரம் அவனியில் இருக்குது.
 அவரவர்எண்ணம் போல் அத்தனையும் நடக்குது
நடை உடை பாவனைகள் அனைத்திலும் மாறுபாடு.
நிறம்  குணம் சூழல் என அனைத்திலும் வேறுபாடு.

அகிலம் யாவும் விரும்புகின்ற கலாச்சாரம் இருக்குது
ஒருமித்த  குரலில் அது ஓங்கியே ஒலிக்குது
தரமான உற்பத்தி வெற்றியாளர்களின் கலாச்சாரம்
அதனால் நிலைத்து நீடிக்கும் வியாபாரம்

உன்னதமான உற்பத்தியின் உயர்ந்த கலாச்சாரம்
ஊறு நேராது தொழிலை சிறப்பாக்கும் இனிய கலாச்சாரம்.
 பொருளைப் பெற்றவரும் விற்றவரும் மகிழ்கின்ற கலாச்சாரம்.
போட்டிச் சந்தையில் வீறுநடை போடுகின்ற  கலாச்சாரம்
.
உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க ஏதுமில்லை ஆச்சாரம்
உண்மையாய் கடைப்பிடித்தால் தடைபடாது வியாபாரம்
இழப்பை தவிர்த்து உற்பத்தியைப் பெருக்கும் கலாச்சாரம்
விலையும் விநியோகமும் சீராக்கும் உன்னத கலாச்சாரம்

உபயோகிப்பாளர்களை நேசித்து உருவாக்கும் கலாச்சாரம்
எண்ணம்  -சொல் -செயலால் சக்தி பெரும் கலாச்சாரம்
ஏற்றம் தரும் சாதனைகள் எளிதாக்கும் கலாச்சாரம்
தரமான உற்பத்தியே நம் அடிப்படையான கலாச்சாரம்.

இன்னும் தவறு எதற்கு ?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

நடக்க பழகும்
சிறு குழந்தையா நாம்?
தடுமாறி விழ
தடம் பதித்த
தடகள வீரர்கள் அல்லவா நாம்?
சாதனை படைக்கும் 
சாதனையாளர்கள் அல்லவா நாம்?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

விற்பனைச் சந்தையில்
தரத்தை முதன்மைப்படுத்தி
 முன்னேறியவர்கள் அல்லவா நாம்
தொடர் ஓட்டத்தில்
தொடர்ந்து வரும் சவால்களை 
துணிந்து புறம்தள்ளி
சுடர்விடும் சூரியனாய்
பிரகாசிப்பவர்கள் அல்லவா நாம்

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

முட்டித் தள்ள
முதுகுக்குப் பின்னால்
ஆயிரம் பேர்.
சற்றே சரிந்தாலும்
ஜன கன மன கீதம் இசைக்க
காத்துக் கிடப்பவர்கள் பலர்.
அத்தனையும் உணர்ந்து தானே 
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

விக்கெட் விழாமல்
விரைந்து ரன் குவிப்பவரையே 
கிரிக்கெட்  விரும்புகிறது.
தரம் கெடாமல்
திறனை உயர்த்துபவரையே
தொழில் விரும்புகிறது
மார்க்கெட்டும் சிறக்கிறது.
மங்காத தரமே
மகிழ்ச்சிப் பயணத்தின்
வெளிப்பாடு என்பதை 
மறந்து விட்டோமா என்ன?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

தரம் என்னும் கூட்டுமுயற்சியில் 
சிலரின் அஜாக்கிரதையால்
பலரின் உழைப்பு  வீணடிக்கப்படுவது
 எவ்வகையில் நியாயம்?
என்னால் தவறு ஒருபோதும் நேராது
ஒலிக்க தெரிந்த நமக்கு
உணர்ந்து சிறக்க  என்ன தயக்கம்?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

தற்செயலாய் வருவதல்ல தரம்
அவரவர் பங்களிப்பை
அடுத்தடுத்த நிலைகளில்
மிகச் சரியாய் செய்வதே
ஒட்டுமொத்த தரமாகி
தவறே இல்லாத உற்பத்தியாகி  வாடிக்கையாளர்களை கவர்கிறது
விற்பனை சிறக்கிறது
உணர்ந்துதானே
உயர்ந்து இருக்கிறோம்

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

தொழில் பழகுனர் அல்ல நாம்
அரை நூற்றாண்டை கடந்தவர்கள் தொழிலில் வல்லுநர்கள்
குறையே இல்லாத உற்பத்தியை
குவிக்கும் சூட்சுமம் கற்றவர்கள்

First time right
Fenner always best

மனதில் பதியட்டும்
தொழிலில் மிளிரட்டும்

தவறை சரி செய்வதைவிட
தவறே இல்லாமல் செய்வது சாலச்சிறந்தது
உணர்வோம் இன்னும் உயர்வோம்.

முதல் மரியாதை



தரமே
உன்னை உருவாக்கும் சிற்பி நாங்கள்
உன்னால் உயர்ந்து இருக்கிறோம்
உயர்வை பெற்றிருக்கிறோம்

உன்னை மெருகூட்ட மெருகூட்ட
வாடிக்கையாளர்களின் எல்லை விரிவடைகின்றது
போட்டி சந்தையில்
மரியாதை மண்டியிடுகிறது

உழைப்பின் வியர்வை துளிகளும்
சிந்தனையின் செயலாக்கமும்
உன்னோடு உறவாடுகையில்
நீ உச்சத்தை தொடுகின்றாய்
அச்சத்தை மறந்து 
பயணிக்கிறோம் நாங்கள்.

தரத்தை உயர்வாய் படைக்கவேண்டும்
அதையும் விரைவாய் படைக்க வேண்டும்
சேதாரம் தவிர்க்க வேண்டும்
முழு உற்பத்தி பராமரிப்பை எட்ட வேண்டும்
முழுதாய் உணர்ந்திருக்கிறோம்
முதன்மை பெற்று இருக்கிறோம்.

புதியன புகுதலும்
பழையன கழிதலும் இயற்கை
எங்களின் அடிச்சுவடு மாறாமல்
புதுமையைப் புகுத்தி இருக்கிறோம்
புதியன கற்றுக்கொள்கிறோம்
விலையும் விநியோகமும் சீராக
அவசியமானதை அறிந்து கொள்கிறோம்
அன்றாடம் கடைபிடிக்கிறோம்.

எங்களின் கூட்டு முயற்சியால்
எங்களின் உற்பத்தி
முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கிறது
வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும்
வாடிக்கையாளர்களை பரவசப்படுத்துகிறது

உன்னை படைக்கும் இல்லம் மட்டுமல்ல
எங்கள் உள்ளமும்
நவீன மயமாக்கப்பட்டுள்ளது

ஓம் என்னும் இரண்டெழுத்து மந்திரம்
சுவாசக் காற்றை உள்ளிழுத்து
நம் சக்தியைப் பெருக்கும்
தரம் என்னும் மூன்றெழுத்து மந்திரம்
உற்பத்தியை சிறப்பாக்கி
வாடிக்கையாளர்களை வசப்படுத்தும்.
தொழிலை சிறப்பாக்கும்

தவறே இல்லாத உற்பத்தி நமதாகட்டும்.
தரத்தால்  நமது மரியாதை தொடர்ந்திடட்டும்.



Thursday, 7 November 2013

பஞ்ச் டையலாக்


தரம் சிறக்க பரவட்டும் 
உலகெங்கும் தரவட்டம் 
வளம் கொழித்து சிறக்கட்டும் 
உழைக்கின்ற கூட்டம் 

எண்ணித் துணிக கருமம் 
வள்ளுவன் சொன்ன திட்டம் 
எண்ண எண்ணக்  குவியும் 
தரம் சிறக்கும் திட்டம்

செருப்போட அருமை 
வெயிலில தெரியும் 
செவென் டூல்சோட அருமை 
தரத்துல தெரியும்

கெட்டும்  பட்டணம் சேர் 
கெடாம இருக்க கெய்சனைச்  சேர்

பேசாதிருந்தால்  பிழையொன்றுமில்லை 
PDCA  இருந்தால் பிழையேயில்லை

உடல்ல FAT  கூடிச்சுனா 
ஹார்ட்ல வரும் அட்டாக் 
உற்பத்தியில வேஸ்ட்  கூடிச்சுனா 
தொழில்ல வரும் அட்டாக் 

செய்யுற வேலையில நேரலாம் தப்பு 
தப்பு இல்லாம வேலை செஞ்சா மதிப்பு 
POKA YOKE  செஞ்சா நேராதுங்க தப்பு 

உடலில BP  இருந்தா பலவீனம் 
தொழிலில BPR  இருந்தா பலம் கூடும்  

(BPR -BUSINESS PROCESS  REENGINEERING) 

மாற்றம் தான் நிரந்தரம் 
கெய்சன்  
சிறந்த மாற்றத்துக்கான  மந்திரம் 
மை சன்னுன்னு  ஊட்டி வளர்த்தா 
பெத்த பிள்ளை 
கெய்சனை  போற்றி வளர்த்தா 
தொல்லை இல்லை 

லீனா இருக்கிற உடல்ல  வியாதி குறைவு 
லீன் கான்செப்ட்  கத்துக்கிட்டா
தொழிலில  இழப்பு குறைவு 
வேஸ்ட் குறையும் 
காஸ்ட் குறையும் 
சொன்ன நேரத்துக்கு 
சொன்னதை செய்கிற 
ஜஸ்ட் இன் டைம்ங்கிறது   சாத்தியமாகும் 

ஆறுமுகக் கடவுளுக்கு சிக்ஸ் பேஸு 
இழப்பை குறைக்க சிக்ஸ் சிக்மா பத்தி பேசு
பேசுறதை செயல்ல காட்டு 
குடுப்பாங்க கலர் கலரா பெல்ட்டு 
கிரீன் பெல்ட்டு  பிளாக் பெல்ட்டு 

இழுக்க இழுக்க இன்பம் 
உடல் நலத்துக்கு கேடு  சிகிரெட்டு 
இழுக்க இழுக்க இன்பம்
உற்பத்தி வெகு ஜோரு மார்க்கெட்டு 
சிகரெட்டு சொன்னது நண்பன் 
மார்க்கெட்டு சொன்னது கன்பான் (Kanban)
வாடிக்கையாளர் உற்பத்திய
பிடித்து இழுத்தா இன்பம் 
நாமளா பிடிச்சு தள்ளுனா  துன்பம் 
அதுதான் இழுக்க இழுக்க இன்பம் 

ஹீரோ சைக்கிள் ஓட்டுறவர் எல்லாம் 
ஹீரோ இல்ல 
PDCA  சைக்கிள்  ஓட்டுறவர்  தான் ஹீரோ 
பெடல் இல்லாமலே மெடல் வாங்குற சைக்கிள் 
PDCA  சைக்கிள் .
 தடம் பதித்து 
தடைகளைக்  களைகிற   சைக்கிள் 
PDCA  சைக்கிள் (பிளான், டூ ,செக்,ஆக்ட் )

PDCA ஹீரோ ஆனா 
ABCD  ஜீரோ ஆகும் 
A  for  ஆக்சிடன்ட் 
B   for  ப்ரேக்டவுன் 
C  for   கஸ்டமர் கம்ப்ளைண்ட் 
D  for    டிபெக்ட்

மனித சக்தி சிந்தனை 
இயந்திர சக்தி சாதனை 
OEE  யைக் கூட்டணும் 
TPM இன்  போதனை 
கூட்டினால் முழு உற்பத்தி சாதனை

TPM  ஜப்பானோட கான்செப்ட் 
PPM  குவாலிட்டியில லேட்டஸ்ட்
(ppm- பார்டஸ் பெர் மில்லியன் )

திரும்பாது போன விநாடி 
கத்து தருவது  SMED 
(Single  Minitue Exchange of  die )

சேன்ஜ்  ஓவர் டைம்ங்கிறது  வேஸ்ட் 
குறைக்கக் கத்துக்கணும் மஸ்ட்