ஆனந்ததத்தை அள்ளித்தரும் உயர்தரம் - அதை
ஆனந்தமா ஆக்கிடுவோம் நிரந்தரம்
சந்தையிலே போட்டிதானே நிலவரம்
தரம் எப்பவுமே விற்பனைக்கு துணை வரும்
அப்போ பொருள் செய்யும் முறை
பழமையாக இருந்திச்சு
அது போட்டியில்லா சந்தையால ஜெயிச்சுச்சு
தரம் இருந்த போதிலும் சற்று குறைஞ்ச போதிலும்
நாம வச்சதே விலை அன்று மறுப்பவர் இல்லே
தினம் பெட்டி பெட்டியா பொருள் சேதம் ஆகுங்க
அதைப் பார்க்கும் போதெல்லாம்
நம்ம நெஞ்சு வலிக்குங்க .....
தினம் பெட்டி பெட்டியா பொருள் சேதம் ஆகுங்க
அதைப் பார்க்கும் போதெல்லாம்
நம்ம நெஞ்சு வலிக்குங்க .....
அந்தக் கால முறைகள் எல்லாம்
ரொம்ப ரொம்ப மாறிடிச்சு
சிஸ்டம் பலவும் கற்கச் சொல்லுது இப்பத் தொழிலு
தரமுன்னு சொல்லுறாங்க சான்று பல கேக்குறாங்க
ஒண்ணு இருந்து ஒண்ணு குறைஞ்சா விட்டுப் போறாங்க
தொழிலு எல்லாமே ஒரு கண்ணாமூச்சி - அதில்
தரம் இல்லாத பொருள் காணாப் போச்சு
விற்பனைகள் உலகமெங்கும் பரவியாச்சு
தொழிலில் நானுதான் எனச் சொல்ல ஆளில்லே
ஒருத்தன் வீழுறான் பலர் உள்ளே நுழையுறான்
என்னடா தொழிலு இதில் எத்தனை புதிரு
தரம் இருந்தால் லாபம் அதை இழந்தவன் பாவம்
நம்மளோட தொழிலு எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சு
ISO ங்கிறோம் 5s ங்கிறோம் TPM ங்கிறோம்
எல்லாம் இருந்து இன்னும் முன்னேற வழி என்னான்னு
ரொம்ப நாமளும் தேடி பார்க்கிறோம்
பொருள் தரத்தை உயர்த்திட நாம சலிப்பதே இல்லை
இழப்பை குறைத்திடும் முறை இருக்குது உள்ளே
நம்மளுக்கு போட்டி கண்டு பயமே இல்லே
ரொம்ப நாமளும் தேடி பார்க்கிறோம்
பொருள் தரத்தை உயர்த்திட நாம சலிப்பதே இல்லை
இழப்பை குறைத்திடும் முறை இருக்குது உள்ளே
நம்மளுக்கு போட்டி கண்டு பயமே இல்லே
பொருளை செய்யிறோம்
அதை விலைக்கு விக்கிறோம்
அதன் செலவு குறைக்கத்தான்
ரொம்ப முயற்சி பண்ணுகிறோம்
பொருளின் தரத்தையே
உயிரா மதிக்கிறோம்
அதன் உயர்வை எண்ணித்தான்
நாளும் உழைக்கிறோம்.