மனதின் வெளிப்பாடு


Monday, 1 October 2012

தரமும் உயர்வும்




அன்றும் என்றும் நம் பொருள்தான்
உயர்வாக வேண்டும்
போட்டிப் பொருள்  நம் பொருளால்
தான் வீழ வேண்டும்
திறமையெல்லாம் செய்யும் தொழிலினிலே 
அதன் வெற்றி எல்லாம் கிட்டும்   தரத்தினிலே
வேறென்ன வேண்டும் தொழிலினிலே
தரம் நன்று என்னும் நிலையினிலே
பேரோடு புகழ்பெற்று வாழ்ந்திருப்போம்
                                                                      (அன்றும் .. என்றும்  )

தரம் தரும் முறைகளைத் தேர்ந்தெடுத்து
செய்வோம் நன்றாய் தொழில் தானே
இடர் என்று ஏதும் ஏற்பட்டால்
சுடர் மிகும் அறிவால்  சரியும் செய்வோம்
சேதாரத்தை அக்கறையாய்
ஒன்றும் இல்லாத நிலைமைக்கு
தள்ளி வைப்போம்
அந்த நிலையாலே நாம் என்றென்றுமே 
குறைவான விலையை நிர்ணயிப்போம்  
வேறென்ன வேண்டும் தொழிலினிலே
தரம் நன்று என்னும் நிலையினிலே
பேரோடு புகழ்பெற்று வாழ்ந்திருப்போம்
 (அன்றும் .. என்றும்  )


செய்யும் பொருள் அதை செய்யும் போதே
 ஒன்று இரண்டு பழுதும் வருகிறதே
 அதிலே கவனம் மிக கொண்டு
 சரி செய்ய தரமும் உயர்கிறதே

 தரத்தில் என்றும் உயர்வாகவே
 நம் வாடிக்கையாளரை அரவணைப்போம்
 அந்த இணைப்பில் வரும் பிணைப்பில் என்றும்
 நம் தொழில் சிறந்திட வழி வகுப்போம்

வேறென்ன வேண்டும் தொழிலினிலே
தரம் நன்று என்னும் நிலையினிலே
பேரோடு புகழ்பெற்று வாழ்ந்திருப்போம்

அன்றும் .. என்றும்  )

No comments:

Post a Comment