தரம் எங்கே? எங்கே? தேடிப் பார்க்கும் உலகிலே
பொருள் தரம் இருந்தால் விற்க விற்க தடையில்லே
அதன் உயர்வைக் கூட்ட உறுதி எடு மனதிலே
தரம் இன்னும் இன்னும் நிறைய வேணும் பணியிலே
தரம் இல்லை இல்லை தோல்வி தானே தொழிலிலே
தரம் தன்னால தான் வந்தா
தொழில் எல்லோருக்கும் ஒண்ணா
தரம் நம்மால் தான் வந்தா
நாம எல்லோருக்கும் முன்னா
அந்த ஒத்த வார்த்தை சொன்னா
பொருள் விற்கும் விற்கும் (Gunna)
அது இல்லாமல் தான் நின்னா
தொழில் ஆகி போகும் மண்ணா(2)
(தரம் எங்கே? எங்கே...)
அடங்கா குதிரையைப் போல
இருந்தன இழப்பு எல்லாமே
ஒரு பூதம் போல, பூதம் போல துரத்தி வந்ததே
படுத்தால் தூக்கமும் இல்லை
தொழிலில் பல பல தொல்ல
அந்த தொல்லையால, தொல்லையால பூரிப்பு இல்லை
குழுவாய் நாங்க இணைய
பெரிதாய் இழப்பு குறைய
தர வட்டம் கண்ட வெற்றி கண்டு ஆர்பரித்தோமே
இழப்ப மனசுல தேக்கி
குழுவாய் இணைஞ்சே போக்கி
இன்னும் கூட்டுறோம் தரத்தை
தடையாய் எதுவும் வந்தாலும்
தடையாய் எதுவும் வந்தாலும்
தடையாய் எதுவும் வந்தாலும்
(தரம் எங்கே? எங்கே...)
இழப்போ ராட்சசன் தாண்டா
தினமும் வருகுது ஜோரா
அது மேல கீழ, மேல கீழ புரட்டுது தோடா
பல நாள் உச்சத்தில் இருந்து
சில நாள் பொத்துன்னு விழுந்தா
அந்த தோல்வியால தோல்வியால
தரத்துல குறைஞ்சா..
யாரும் கூடவே வாரார்
வந்தவர் பாதியில் போவார்
அவரை தக்க வைக்க அவரு நம்ம
சொந்தம் இல்லையே.....
தரத்த வெகுவாய் உயர்த்தி
இழப்பை தடுத்தே நிறுத்தி
ஜோரா பயணத்தை கெளப்பி
உலகை வலம் வருவோமே
உலகை வலம் வருவோமே
உலகை வலம் வருவோமே
(தரம் எங்கே? எங்கே...)
No comments:
Post a Comment