மனதின் வெளிப்பாடு


Sunday, 16 September 2012

அச்சம் என்பது தேவைங்க















அச்சம் என்பது தேவைங்க
அஞ்சாமை உயிரைப் போக்குமுங்க
அச்சம் என்பது தேவைங்க
எய்ட்ஸ் அச்சம் என்பது தேவைங்க
அஞ்சாமை உயிரைப் போக்குமுங்க

பாரத நாடு, பழம்பெரும் நாடு
உயருது அனைத்திலும் சிறப்போடு
இளைஞர்கள் கையில் எதிர்காலம் என
இருக்குது நம்பிக்கை கனவோடு

மேலைக் கல்வியில் முன்னிலை அடைந்தால்
நாட்டிற்கதுவே  சிறப்பாகும்
மோகக் கலவியில் எய்ட்சை அடைந்தால்
குடும்பமும் நாடும் அழிவாகும்

மனைவி இருக்கையில் மற்றவள் எதற்கு ?
என்றிருந்தாலோ துன்பமில்லை
இயன்றவரைக்கும் அனுபவிப்போம் என
நினைத்தால் வரும்துயர் கொஞ்சமில்லை

நோயை எதிர்க்கும் ஆற்றலைக் கொடுப்பது
அவரவர் ரத்தத்தின் வெள்ளை அணு
வெள்ளை அணுக்களை அழித்தே நோயை
சிறப்பாய் வளர்க்குது எய்ட்சின்  அணு

ஆசையின் தவறால் அடைந்திடும் சுகமோ
அனுபவிப்பவர்க்கோ  சில நிமிடம்
அதனால் அவரும் இழந்து தவிப்பது
அவரவர் வாழ்வின் பல வருடம்

காக்கும் சாதனம் நிறைய இருக்கு
அவசியம் நேர்ந்தால் அணிவதற்கு
அவசியம் தவிர்த்து ஒழுக்கம் காத்து
ஒழிப்போம் எய்ட்சை அடியோடு.




  

No comments:

Post a Comment