மனதின் வெளிப்பாடு


Wednesday, 20 June 2012

தமிழ் பண்பாடு காப்போம்



ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே கும்மாளம்
அதில் பரவுதுங்கோ எய்ட்ஸ் ரொம்ப பிரமாதம்
அந்த நினைப்பினிலே கவனம் மிக இருக்கணும் 
அதை மறந்து விட்டா காலமெல்லாம் தவிக்கணும்

(ஆணும் பெண்ணும்...)

ஆர்வத்தில் செய்துவிடும் 
தவறு அந்த நோய் தரும் 
அந்த நோய் வந்தால் 
உயிர் பறித்துச் சென்றிடும் 
உன் உயிர் பறித்து சென்றிடும்

பாதை பல நடக்கும்படி இருக்குது
 நல்ல பாதை பல நடக்கும் படி இருக்குது 
அதில் நடக்காமல் சிலர் கால்கள்
 ஊர் மேய துடிக்குது...
 ஊர் மேய துடிக்குது... 
(ஆணும் பெண்ணும்...)


மாப்பிளை பொண்ணுகளை சேர்த்து வைப்பது கல்யாணம்(2)
கல்யாணம் முடிக்குமுன்னே எதுக்கு இந்த கும்மாளம்
அந்த ஆசைக்கு போட்டிடனும் கடிவாளம்
(ஆணும் பெண்ணும்...)

மனதில் தோன்றும் ஆசை என்பது
அனைவருக்கும் உண்டுங்க (2)
பார்த்த உடனே அடைய துடிக்கும் 
ஆசை என்பது தவறுங்க
பெத்தவங்க பெரியவங்க
அனைவருக்கும் உண்டுங்க(2)
அவங்க நிலைமை என்ன ஆகும்
நீங்க கொஞ்சம் சிந்திங்க...
(ஆணும் பெண்ணும்...)

ஒருவன் ஒருத்தி இல்லறம்
உறவு என்றும் சுதந்திரம்
சுதந்திரத்தை காப்பது நம் கடமைங்க
மனசை அலையவிட்டா வந்திடுமே எயட்சுங்க

கை நிறைய சம்பளம்
வசிப்பதுவும்  தனியிடம்
தவறு செய்ய தூண்டிடுதே பலரிடம்
அந்தத் தவறாலே புகுந்திடும் நோய் சிலரிடம்

ஆப்பிரிக்கா  முதலிடம்
நாம அதுக்கு அடுத்த இடம்
எதுலயின்னு யோசிச்சு பாருங்க...
அது பரவுர எய்ட்ஸ்ல தானுங்க
(ஆணும் பெண்ணும்...)

 மனசுக்குள்ளே ஆசை என்பது கடலுங்க
அது கரை தாண்ட வந்திடுமே புயலுங்க
மனசுக்குள்ளே புகுந்திடும் சில மயிலுங்க
அதைப் பக்குவமா தள்ளி வைக்க பழகுங்க...
(ஆணும் பெண்ணும்...)

No comments:

Post a Comment