மனதின் வெளிப்பாடு


Sunday, 6 May 2012

இந்தியா 2020












வளருகின்ற இந்தியா நடப்பு
வளர்ந்த இந்தியா இலக்கு
ஒவ்வொரு இந்தியரும் பொறுப்பு
ஓய்வின்றி
  உழைக்கணும் நினைத்து
தேவைகள் நிறையவே இருக்கு
தீர்வுகள் திறமையை இணைத்து

உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு
உள்கட்டமைப்பில் அதிவிரைவு
தனிமனித வருமானத்தில் மனநிறைவு
அறிவியல் தொழில்நுட்பத்தில் வெகு உயர்வு
வேரறுக்கும் வறுமையில் மிகத்துணிவு
போதிக்கும் கல்வியில் நிஜத்தெளிவு
மக்கள் தொகை பெருக்க்கத்தில் வரும்குறைவு
மற்றவரை நேசிக்கும் மனத்தெளிவு
உயர்வுக்கு வழிகாட்டும் சிலகாரணிகள்
இலட்சியப்
  பயணத்தின் பல நிலைகள்

வருங்காலச் சிற்பிகளே
வளருகின்ற இந்தியாவை
வளரும் இந்தியாவாக உருமாற்றும்
  காரணிகளே
நிகழ்காலத்தின் நிஜங்களைக்கண்டு
ஓய்ந்து போகாதீர்கள்
முடியுமா என்ற கேள்வியோடு
முடிந்து போகாதீர்கள்

தடைகளைக்கண்டு நீங்கள்
தளர்ந்து போகாதீர்கள்
அரசியல் ஆதிக்கம் கண்டு
அரண்டு போகாதீர்கள்
புற்றீசல் கட்சிகளை கண்டு
மிரண்டு போகாதீர்கள்
சாதி மத பேதத்தால்
நொந்து
  போகாதீர்கள்
முடியும் என்ற முனைப்போடு
முன்னேறுங்கள் வலிமையோடு
இலக்கு மட்டுமே முன்னால்
தடைகள் குறையும் உம்மால்
இலக்கு அனைவரின் சூத்திரமானால்
சாதனை நிச்சயம்
  சாத்தியமாகும்.

No comments:

Post a Comment